ஆரோக்கியம்உறவுகள்புதியவைமருத்துவம்

உங்க குழந்தைகள் குட்டையாகவே இருக்கிறார்களா… இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க.

பொதுவாகவே பெரியோருக்கு உணவு கொடுக்கும் போது கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது பெற்றோர் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சில குழந்தைகள் என்னதான் உணவு விடயத்தில் கவனமாக இருந்தாலும் சரியாக நேரத்திற்கு உணவு கொடுத்தாலும் குட்டையாகவே இருப்பார்கள் இது பொற்றோரை குறிப்பாக தாயை மிகவும் கவலையில் ஆழ்த்தும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க ஊட்ச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உயரத்தை அதிகரிக்கும் உணவுகள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுகளை ஊட்டினால், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயரம் இரண்டும் நன்றாக இருக்கும்.

ஆனால் மரபணு காரணங்களால் குழந்தைகள் உயரமாக வளரவும் வாய்ப்புள்ளது. பால் பொருட்கள் ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரங்கள்.

உங்கள் குழந்தைகள் உயரமாக வளர விரும்பினால், பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஏனெனில் அவை வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், அவற்றில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. இவை குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன.

குழந்தைகள் பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் உயரம் அதிகரிக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

இலை காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சைக் காய்கறிகளும் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பல சமயங்களில் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் குழந்தைகள் உயரமாக வளருவதில்லை. அதனால்தான் உங்கள் குழந்தையின் உணவில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.

முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். இவற்றில் அதிக அளவு வைட்டமின் பி2 உள்ளது. இது உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகள் உயரமாக வளர விரும்பினால் கண்டிப்பாக முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சோயாபீன்ஸ் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் நல்ல மூலமாகும். இவற்றில் உள்ள சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கும். குழந்தைகள் உயரமாக வளரவும் உதவுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker