வெறும் 5 நிமிடம் போதும்…! ஆரோக்கியமான புதினா கொழுக்கட்டை ரெடி…
தற்போது பருவமழையின் காரணமாக குளிர்ச்சியான காலநிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த குளிர்காலத்தில் இதமான உணவை எடுத்துக்கொள்ள தான் அனைவரும் விரும்புவார்கள்.
அதிலும் மாலை நேரத்தில் சூடாக பஜ்ஜி,போண்டா, வெங்காய பக்கோடா, முறுக்கு போன்றவற்றை சாப்பிட்டு டீ குடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதுவே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொறித்தெடுத்த உணவை உட்கொள்வதால் அஜீரண கோளாறுகள் ஏற்படும்.
இதை தடுப்பதற்காக வீட்டிலே ஆரோக்கியமான முறையில் எப்படி சூப்பரான புதினா கொழுக்கட்டை செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 2 கப்
தேங்காய் பால் – ஒன்றரை கப்
உப்பு – சுவைக்கு ஏற்ப
புதினா தழை – அரை கப்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
இஞ்சி – சிறியது
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 1
செய்முறை
முதலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை மற்றும் பூண்டை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து அரைத்த விழுதுடன் தேங்காய் பால் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்க வேண்டும். நுரைக்கட்டி வரும்போது அரிசி மாவை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
அதில் தேவையானளவு உப்பு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக கைப்பிடிக்கும் அளவிற்கு சூடு வந்தவுடன் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.