வெற்றிலையில் லட்டா… கேட்கவே வித்தியாசமா இருக்கே… அப்போ உடனே செய்து அசத்துங்க.
பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு பண்டம் என்றால் அது லட்டு என்று தான் கூறமுடியும். இதை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?
வழக்கமாகவே லட்டை மஞ்சள் நிறத்தில் தான் பார்த்திருப்போம். அதுவும் பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊற வைத்து விடும்.
அதுவே வெற்றியை வைத்து லட்டு செய்து இருக்கிறார்கள் என்றால் ஒரு சிலர் கிட்டயும் நெருங்க மாட்டார்கள்.
ஆனால் அது எல்லாம் பேச்சு மட்டுமே. வழமையாக செய்யும் லட்டை விடவும் வெற்றிலையை வைத்து செய்யும் லட்டுக்கு ஒரு மவுசு இருக்க தான் செய்கிறது.
இதை பார்க்கவே பச்சை நிறத்தில் அழகாக இருக்கும். இதை வீட்டில் இருப்பவர்கள் ஆசையாக சாப்பிடக்கூடிய வகையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை-3
மில்க்மேய்ட்-50 கிராம்
தேங்காய் துருவல்- ஒரு கப்
டூட்டிபுரூட்டி- 4 ஸ்பூன்
குல்குந்து- 4 ஸ்பூன்
நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்சியில் காம்புகள் அற்ற வெற்றிலையில் கிழித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின் அதில் மில்க்மேய்டை ஊற்றி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி தேங்காய் துருவலை வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு வதங்கிக்கொண்டிருக்கும் தேங்காய் துருவலில் அரைத்து வைத்த வெற்றிலை கலவையையும் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
இதை ஒட்டும் பதத்திற்கு விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அடுத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் டூட்டிபுரூட்டி மற்றும் குல்குந்து சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக இந்த கலவையை உருண்டையாக உருட்டி நடுவில் குல்குந்து கலவையை வைத்து நன்றாக மூடி லட்டு வடிவத்திற்கு உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.
இந்த படிமுறையின் படி செய்து எடுத்தால் சுவையான வெற்றிலை லட்டு ரெடி!