இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளணுமா அப்போ இந்த பானங்களை எடுத்துக்கோங்க.
இதய ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால் உண்ணும் உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும்.
சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால் அது உடலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். தற்போது நம்மைச் சுற்றி ஆரோக்கியமற்ற உணவுகள் அதிகம் சூழ்ந்துள்ளன.
இந்த ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டால் அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் இதயத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீரழிக்கும். அதோடு சமீப காலமாக மாரடைப்பால் தினந்தோறும் பலர் இறக்கிறார்கள். இதற்கு உணவுகளும் முக்கிய காரணமாக உள்ளன.
தண்ணீர்
தண்ணீர் வெறும் தாகத்தை தணிக்கக்கூடிய பானம் மட்டுமல்ல உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க இன்றியமையாத ஒரு பானம்.
தாகம் ஏற்படும் போது கார்போனேட்டட் சோடா பானங்களை குடிப்பதற்கு பதிலாக தண்ணீரைக் குடியுங்கள்.
ஏனெனில் நீரில் கலோரிகள் எதுவும் இல்லை, கொழுப்புக்கள் இல்லை மற்றும் புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் பிற கரிம ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
குறைந்தது 2 லிட்டர் அல்லது 8-10 டம்ளர் நீரைத் தவறாமல் குடிக்க வேண்டும்.
ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் எடை, வயது, உயரம், வியர்க்கும் அளவு, உடல் செயல்பாடுகள், காலநிலை, ஆரோக்கியம் போன்றவற்றைப் பொறுத்து வேறுபடும்.
எனவே தண்ணீர் குடிக்க எவ்வித கட்டுப்பாடும் இல்லை. போதுமான அளவு தண்ணீரை ஒருவர் குடித்து வந்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
உடல் வறட்சி மற்றும் உடல் சோர்வு தடுக்கப்படும், நச்சுக்கள் வெளியேற்றப்படும், சரும நிறம் மேம்படும், உடல் எடை குறையும்.
இது தவிர இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
இளநீர்
தண்ணீருக்கு அடுத்தப்படியாக மிகச்சிறந்த பானம் என்றால், அது இளநீர் தான். இளநீர் கலோரி குறைவான பானம் மற்றும் இதில் கொழுப்புக்களும் குறைவு.
அதோடு இதில் கார்போஹைட்ரேட்டுகள், எலக்ட்ரோலைட்டுகளான பொட்டாசியம், சோடியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன.
மற்ற பானங்களை விட இளநீர் மிகச்சிறந்த பானம். ஏனெனில் இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும்.
செரிமானம் சிறப்பாக நடைபெறும், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை குறையும், சிறுநீரக கற்கள் தடுக்கப்படும், இரத்த அழுத்தம் குறையும், இதய ஆரோக்கியம் மற்றும் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
மாதுளை ஜூஸ்
ஜூஸ்களிலேயே மாதுளை ஜூஸ் மிகவும் சுவையான மற்றும் 3 மடங்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை கொண்ட ஆரோக்கியமான பானம்.
மாதுளையில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பாலிஃபீனால்கள் வளமான அளவில் உள்ளளன.
மாதுளையில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இரத்தம் உறைவதற்கு தேவையானவையாகும்.
இதில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் மக்னீசியம் உள்ளன.
மாதுளை ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும், இரத்த சோகை தடுக்கப்படும், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை பராமரிக்கப்படும், புற்றுநோயின் அபாயம் குறையும், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.
க்ரீன் டீ
உடல் எடையைக் குறைப்போருக்கு மத்தியில் பிரபலமான ஒரு பானம் தான் க்ரீன் டீ.
இந்த க்ரீன் டீயில் பல்வேறு கலவைகள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உள்ளன.
ஒரு கப் க்ரீன் டீயில் கலோரிகள் இல்லை, புரோட்டீன்கள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் எதுவும் இல்லை.
அதேப்போன்று இதில் வைட்டமின்களும், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அளவிடக்கூடிய அளவில் காணப்படுகின்றன.
க்ரீன் டீயில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோயால் ஏற்படும் மரணத்தின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையைப் பராமரிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் விரும்பினால் க்ரீன் டீயைக் குடித்து வாருங்கள்.
ஆரஞ்சு ஜூஸ்
மாதுளை ஜூஸைப் போன்றே ஆரஞ்சு ஜூஸ் கூட ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன.
ஆரஞ்சு பருவகால நோய்களைத் தடுக்க உவுகிறது.
சுத்தமான ஆரஞ்சு ஜூஸை காலை உணவின் போது குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும், சிறுநீரக கற்களின் அபாயம் குறையும், எடையைக் குறைக்க உதவும், இரத்த சோகையைத் தடுக்கும்.
ஆனால் டப்பாவில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஆரஞ்சு ஜூஸைக் குடிக்கக்கூடாது.
நற்பதமான பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆரஞ்சு ஜூஸைத் தான் குடிக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.