எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா… கண்டிப்பா திராட்சை சாப்பிடுங்க.
பொதுவாகவே ஆண்கள் ஆனாலும் பெண்கள் ஆனாலும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
குறிப்பாக பெண்கள் இயற்கையிலேயே இது தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
அந்தவகையில் பெண்களின் சர்மத்தை எப்பொதும் இளமையாக வைத்திருப்பதில் திராட்சை பழங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. திராட்சையில் அதிக ஆரோக்கியம் சார்ந்த சத்துக்கள் இருக்கிறது.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் , வைட்டமின்ஸ், நார்சத்துக்கள் அதிகம் உள்ளது. திராட்சை தினசரி சாப்பிட்டுவர ரத்த அழுத்தம் குறையும், கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்திற்கு எதிராக செயல்படும் என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள பாலிபினாஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஒரு கிளாஸ் ஓயினில் இருப்பதைவிட மிகவும் அதிகம். திராட்சையில் அடங்கியுள்ள ஆண்டி ஆக்ஸிடண்டான வைட்டமின் சி, ரெஸ்வரட்ரால் உள்ளது.
இவை எப்போதும் இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. திராட்சையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முக சுருக்கங்கள் நீங்கி முகம் புத்துணர்ச்சியுடனும் பொலிவாகவும் காணப்படும்.
இதைத்தொடர்ந்து சாப்பிட்டால், கருவளையத்தை போக்கிவிடும். கரும்புள்ளிகளை நீக்கும். சீரான சருமத்தை தரும். பக்டீரியா தொற்றுகள் அதிகரிக்காது. வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளதால், பருக்களின் வீக்கம் மற்றும் சிவப்பை போக்குவதில் மிகவும் பயன்தர கூடியதாக இருக்கும்.
சருமம் வரட்சியடைவதை தடுக்கும். சீரான ஈரப்பதத்தை பாதுகாக்கும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி உடலை எப்போதும் மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் திராட்சையில் உள்ள ரஸ்வரட்டால், சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுபாப்பதுடன் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கின்றது.