ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்

கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை போக்க உதவும் ஈஸியான 5 டிப்ஸ்.!

உங்கள் கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கிறதா.!! அப்படி என்றால் பார்ப்பதற்கு மிகவும் டல்லான தோற்றத்தில் நீங்கள் காணப்படுவீர்கள். கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்களை பின்பற்றுவது.

இரவு நேரத் தூக்கத்தை தொலைப்பது, தவறான உணவுப்பழக்கம் அல்லது மன உளைச்சல் போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் உருவாகின்றன. நீங்கள் பல முறை முயற்சி செய்தும் கருவளையங்களை நீக்க முடியாவிட்டால் உங்களுக்கு சில ஆயுர்வேத வைத்தியங்கள் உதவலாம். கண்களுக்கு கீழ் தோன்றியிருக்கும் கருவளையங்களை விரைவில் குறைக்க 5 சிறந்த ஆயுர்வேத வைத்தியங்கள் இங்கே.

திரிபலா: திரிபலா உங்கள் கருவளையங்களை நீக்க உதவும் சிறந்த ஆயுர்வேத மூலிகை மருந்தாகும். கருவளையங்களை போக்க அரை டீஸ்பூன் திரிபலா பவுடர் எடுத்து கொள்ளுங்கள். இதில் சில துளிகள் தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்கள் கண்களுக்கு அடியில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே காய வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

கற்றாழை: கற்றாழையானது ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டுள்ளது, இது வீக்கம் மற்றும் கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையங்களை குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை வாங்கி பயன்படுத்துவதை விட, கற்றாழை இலையிலிருந்து ஃபிரெஷ்ஷாக ஜெல்லை பிரித்தெடுத்து, அதை உங்கள் கண்களுக்குக் கீழே தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவி விடுங்கள்.

வெள்ளரிக்காய்: வெள்ளரி நல்ல குளிர்ச்சியான விளைவை கொண்டிருப்பதும் மற்றும் எண்ணற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை கொண்டிருப்பதும் பலருக்கும் தெரிந்த ஒன்று. வெள்ளரியில் அடங்கி இருக்கும் பண்புகள் கண்களை சுற்ற ஏற்படும் கருவளையங்களை குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரி ஸ்லைஸ்களாக ஆக்கி கொண்டு கண்களை மூடி, கண்கள் மேல் மற்றும் கருவளையத்தை சுற்றி வெள்ளரி பீஸ்களை அப்படியே வைத்து 10-15 நிமிடங்கள் ரெஸ்ட் எடுங்கள். தினசரி இவ்வாறு செய்து வருவது கருவளையம் குறைய உதவும்.

மஞ்சள்: மஞ்சளில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும வீக்கத்தை குறைக்கும் மற்றும் கருமையான வட்டங்களை நீக்கி சருமத்தை ஒளிர செய்யும். 1 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சில துளிகள் அன்னாசி பழச்சாறு கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தில் அப்பளை செய்து சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின் முகத்தை கழுவி விடவும்.

பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள மென்மையான சருமத்திற்கு ஊட்டமளித்து கருவளையங்களை வெகுவாக குறைக்க உதவுகிறது. எனவே இரவில் தூங்க செல்லும் முன் கண்களுக்கு கீழே கருவளையம் உள்ள இடத்தில சில துளிகள் பாதாம் எண்ணெயை தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker