கொரிய நாட்டினர் அழகாக இருக்க இதை தான் செய்கிறார்களா…
பொதுவாகவே கொரிய பெண்களின் சருமம் கண்ணாடி போல தெளிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் பின்பற்றும் சரும பராமரிப்பு வழக்கம்.
கொரிய பெண்களின் சரும பராமரிப்பு வழக்கம் பொதுவான சரும பராமரிப்பு வழக்கத்தை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. அப்படி என்ன வித்தியாசமான சரும பராமரிப்பு வழக்கம் அது என்பதை நாம் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறதா? வாருங்கள்! பார்க்கலாம்.
டபுள் க்ளென்சிங்: கொரிய சரும பராமரிப்பு முறையில் ஒரு முக்கியமான படி இது. முதலில் சருமத்தில் இருக்கக்கூடிய மேக்கப், அழுக்கு மற்றும் தூசு போன்றவற்றை ஆயில் சார்ந்த க்ளென்சர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு அடுத்து தண்ணீர் சார்ந்த க்ளென் பயன்படுத்தி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து விட்டால், சருமத்தில் எந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலும் அதை எளிதாக உறிஞ்ச உதவி புரிகிறது.
சருமத்திற்கு Fermented products: பழங்கால பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்ட புளிக்க வைக்கப்பட்ட பொருட்களின் வியக்க வைக்கும் நன்மைகள் காரணமாக இன்று வரை அவை பின்பற்றப்பட்டு வருகின்றன. ஃபெர்மெண்டெட் ஸ்கின் கேர் ப்ராடக்டுகளில் இருக்கக்கூடிய என்சைம்கள் மற்றும் ப்ரோ பயோடிக்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து அவற்றை புத்துணர்ச்சியோடு வைக்க உதவுகிறது. அரிசி ஊற வைத்த தண்ணீர் கொரிய அழகு பராமரிப்பு வழக்கத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தை பளிச்சிட செய்து, சமமான ஸ்கின் டோனை தருகிறது.
ஸ்கின் ஃப்ளட்டிங் (skin flooding): கண்ணாடி போன்ற சருமத்தை பெற இந்த நுட்பம் மிகவும் முக்கியமானது. இந்த படியில் பல்வேறு விதமான ஹைட்ரேட்டிங் ப்ராடக்டுகளை அடுக்குகளாக சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும். லைட் வெயிட் எசென்ஸ் மற்றும் டோனர்களில் தொடங்கி ஈரப்பதம் தரக்கூடிய சீரம் வரை பல்வேறு விதமான ஹைட்ரேடிங் ப்ராடக்டுகளை ஒவ்வொன்றாக சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது சோர்ந்து போன சருமத்தை கூட பார்ப்போரை ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றி விடுமாம்.
சன் ப்ரொடக்ஷன்: சன் ப்ரொட்டக்ஷன் இல்லாமல் கொரிய சரும பராமரிப்பு முழுமை அடையாது. சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பது அவசியம். இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, பிக்மென்டேஷன் மற்றும் சன்பர்ன் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. லைட் வெயிட், ப்ராடு ஸ்பெக்ட்ரம் மற்றும் அதிக எஸ்பிஎஃப் கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
இயற்கை பொருட்கள்: என்னதான் தொழில்நுட்பம் மற்றும் நவீன அறிவியல் வளர்ந்து வந்தாலும், பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களுக்கு எப்பொழுதுமே தனி சிறப்பு உண்டு. கிரீன் டீ, ஜின்செங், டேவிட்டியானா ரூட் எக்ஸ்ராக்ட் போன்ற பொருட்கள் கொரிய அழகு பராமரிப்பு வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை சருமத்தை ஆற்றி அவற்றை அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளன. அதோடு இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றதாக அமைகிறது.
ஷீட் மாஸ்க் : கொரிய அழகு பராமரிப்பு பழக்கம் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு முக்கிய காரணம் இந்த ஷீட் மாஸ்க். ஷீட் மாஸ்க் நமது சருமத்திற்கு ஆழமான ஈரப்பதம் மற்றும் போஷாக்கை அளித்து அவற்றை கவனித்துக் கொள்கிறது. பல்வேறு விதமான ஷீட் மாஸ்குகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.