ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் “இட்லி பொடி”…
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும். அந்த தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இட்லி பொடி இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
பெரும்பலானோர் என்னதான் இட்லி, தோசைக்கு சாம்பார் செய்து வைத்தாலும் நல்லெண்ணைய்யுடன் இட்லி பொடியை சேர்த்து சாப்பிடவே அதிகம் விரும்புவார்கள். அப்படியானவர்கள் இனி கடைகளில் இட்லி பொடியை வாங்காமல் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து செய்யலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 ½ கரண்டி
கடலை பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
வேர்க்கடலை – 1/4 கப்
பொட்டு கடலை – 1/4 கப்
குண்டூர் சிவப்பு மிளகாய் – 10
காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 10
துருவிய தேங்காய் – 1 கப்
பூண்டு – 4 பல்
புளி – சிறிய அளவு
கல் உப்பு – 1 1/2 கரண்டி
பெருங்காய தூள் – 1/2 கரண்டி
சர்க்கரை – 1 கரண்டி
மழை சாரல் போன்ற இட்லி பொடி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும்.
பின்னர் கடலைப்பருப்பையும் உளுத்தம் பருப்பையும் சேர்த்து 2 நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வேர்கடலையை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து விட்டு பொட்டுக் கடலை சேர்த்து 2 நிமிடத்திற்கு வறுக்கவும்.
பின்னர் நல்லெண்ணெய்யில் குண்டூர் சிவப்பு மிளகாய், காஷ்மீரி சிவப்பு மிளகாயை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு மீண்டும் நல்லெண்ணெய் சேர்த்து துருவிய தேங்காய், பூண்டு, புளியை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வறுத்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து பொடி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். வறுத்த பருப்பு, வேர்க்கடலை என்பவற்றையும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் வறுத்து எடுத்துக் கொண்ட பூண்டு, புளி, உப்பு, சக்கரை, தேங்காய் என்பவற்றையும் அரைத்து பொடியாக சேர்த்தால் சுவையான இட்லி பொடி தயார்.