மீந்து போன சாதத்தை வைத்து வடகம் செய்திருப்பீங்க… ஆனா சப்பாத்தி செய்திருக்கீங்களா? இதோ ரெசிபி!
சப்பாத்தி பொதுவாக அனைத்து வீடுகளிலும் அடிக்கடி செய்யப்படும் உணவுகளில் ஒன்று. குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் இரவு உணவாக சப்பாத்தியை மட்டுமே தேர்வு செய்வார்கள். இதில், துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் அதிகம் உள்ளது. நீங்கள் சப்பாத்தியின் ஏதாவது புதிதாக ட்ரை செய்ய நினைத்தால், நாங்கள் உங்களுக்கு ரைஸ் சப்பாத்தி செய்வது எப்படி என கூறுகிறோம்.
நம்மில் பலர் சாதம் மீதமானால், பெரும்பாலும் வடகமாக அதை தயாரிப்போம். ஆனால், மீந்து போன வெள்ளை சாதத்தை வைத்து ஒரு மிருதுவான சப்பாத்தி செய்யலாம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இதற்கான ரெசிபியை நாங்கள் கூறுகிறோம். இதன் சுவை நார்மல் சப்பாத்தியை விட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
மீதமான சாதம் – 1 கப்.
கோதுமை மாவு – 1 கப்.
உப்பு – 1 ஸ்பூன்.
எண்ணெய் – 4 ஸ்பூன்.
நெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில், ஒரு மிக்சர் ஜாரில் மீதமுள்ள சாதம், உப்பு மற்றும் கோதுமை மாவை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது கோதுமை மாவு மாற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
மாவு தயாரானதும் அதன் மீது எண்ணெய் தடவி பாத்திரத்தை மூடி 30 நிமிடம் மாவை ஊறவைக்கவும்.
பிறகு மாவை, சிறு உருண்டைகளாக பிரித்து ஒரு சிறு உருண்டையை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும்.
இப்போது ஒரு பானை சூடாக்கி தேய்த்த சப்பாத்தியை வைக்கவும். சப்பாத்தியை சிறிது நெய் தடவி இருபுறமும் வேகவைத்து எடுத்தால், சுவையான மீதமான ரைஸ் சப்பாத்தி தயார்.
இதனுடன் முட்டை அல்லது காய்கறி குருமா வைத்து பரிமாறினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.