உலக நடப்புகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்புதியவை

17வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்த இளைஞர்… எப்படி சாத்தியமானது..?

சுற்றுலா செல்வது என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் மலை ஏறுவது என்பது சாகச விரும்பிகள் அதிகம் முயற்சிக்கும் ஒன்று. சின்ன சின்ன குன்றுகள் தொடங்கி, உலகின் பெரிய சிகரமான எவரெஸ்ட் வரை செல்ல வேண்டும் என்ற கனவு பலருக்கும் உண்டு. அதை ஒரு சிலர் தீவிரமாக முயற்சித்து செயல்படுத்தியும் உள்ளனர், அப்படி 1 சாதனை கதையைத் தான் பார்க்க இருக்கிறோம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரரான கென்டன் கூல்- Kenton Cool, புதிய ஒரு சாதனையை சமீபத்தில் செய்துள்ளார். என்ன புதிய சாதனை என்று தானே கேட்கிறீர்கள்.. பொறுங்க பொறுங்க.. அதைத் தான் சொல்ல இருக்கிறோம். நேபாளி அல்லாத ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை அதிக அளவில் ஏறிய சாதனையைத் தான் படைத்துள்ளார்.

அதுவும் இரண்டு முறை மூன்று முறை அல்ல.. மொத்தம் 17 முறை. சமீபத்தில் கென்டன் தனது 17வது முறை சிகரம் ஏறும் பயணத்தை முடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். இந்த பயணத்தின்போது, கென்டன், அவரது வழிகாட்டி டோர்ஜி கியெல்சன் ஷெர்பா மற்றும் மற்றொரு நண்பருடன் உலகின் உச்சியை அடைந்துள்ளார்.

கென்டனுடைய வழிகாட்டியான ஷெர்பா செல்வதும் இது முதல் முறை அல்ல. ஷெர்பா பலமுறை எவரெஸ்ட் மற்றும் K2 மலைச்சிகரங்களை ஏறியுள்ளார். இந்த் சாதனை குறித்து, கென்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில சுவாரசிய அனுபவங்கள் மற்றும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “01:30 இங்கிலாந்து நேரப்படி, கென்டன், ரிச்சர்ட் மற்றும் டோர்ஜி கியெல்சன் ஷெர்பா ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். கென்டன் தனது 17வது மலை உச்சி பயணத்தை அடைந்தார்!! சிகரத்தின்கால நிலைமைகள் நம்பமுடியாத அளவிற்கு குளிர்ச்சியாக இருந்தன, டிராக்கர்/காம்ஸ் செயலிழந்து பல தொழில்நுட்ப தோல்விகளுக்கு வழிவகுத்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது நேபாளத்தில் காலை 6:15 மணிக்கு எவேறேச்ட் சிகரத்தை அடைந்த 49 வயதான கென்டன் 2004 ஆம் ஆண்டு முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். அதன் பின்னர் 17 முறை ஏறிவிட்ட அவர் இந்த முறை சிகரத்தை அடைந்து ,கீழே இறங்கிய பிறகு சொன்ன விஷயம் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர் எவரெஸ்ட் சிகரம் பனியை இழந்து வருவதாகவும், வறண்ட மற்றும் பாறைகளாக மாறியுள்ளது என்றும் கூறினார்.

இது ஒரு தீவிர காலநிலை மாற்ற கவலையை இயற்கை ஆர்வலர்களிடமும் மலை ஏற்றம் செய்பவர்களிடமும் எழுப்பியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கடந்த நூற்றாண்டில் பூமியின் வெப்பநிலை சராசரியாக 0.74 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஆனால் இமயமலைத் தொடர் உலக சராசரியை விட வெப்பமயமாதலைச் சந்தித்து வருகிறது.

இதனால் நேபாளத்தின் சராசரி வெப்பநிலை ஆண்டுக்கு 0.06 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு பொருளாதார வளர்ச்சிக்காக தொழிநுட்ப ரீதியில் ஓடிக்கொண்டு இருக்கும் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் உள்ள இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அமைந்து பாவம் பாடை படுகிறது.

இரண்டு நாட்டில் வெளியேற்றப்படும் புகையும் காற்றில் கலந்து மாசையும், வெப்பமயமாதல் விளைவுகளையும் ஏற்படுத்துவதால் இமயமலையில் உள்ள பனி வேகமாக உருகி வருகிறது. சமீபத்தில், காமி ரீட்டா ஷெர்பா, 28வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். எவரெஸ்ட் சிகரம் அதிகம் எரிய நேபாளி என்ற சாதனைக்கு உரியவர் இவர்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker