உங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவு உள்ளதா..? இதை செய்தாலே போதும்..!
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாசக் கோளாறு ஆகும். உலகில் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்துமா இருந்தால் மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டு மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
நம் நாட்டில், ஏறக்குறைய 34.3 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா ஏற்பட நிலையான காரணம் எதுவும் இல்லை. ஆனால், இது இது முக்கியமாக ஒரு மரபுவழி பரம்பரை நோயாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சுற்றுப்புறச் சூழலும் இந்த நிலைக்கு வழிவகுப்பதாக தெரிய வந்துள்ளது. இதனைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்:
சுற்றுச்சூழல் காரணிகள்: புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு மற்றும் இரசாயனங்கள் போன்ற நம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாடு காரணமாக ஆஸ்துமா ஏற்படும் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது.
மரபணு காரணிகள்: குடும்பத்தில் யாருக்கேனும் ஏற்கனவே ஆஸ்துமா அல்லது இது போன்ற பிற ஒவ்வாமை நோய்கள் இருந்தால், அவர்களின் சந்ததியினருக்கும் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சுவாசக் கோளாறுகள்: நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகள் காற்றுப்பாதைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி நாள்பட்ட சுவாசத் தொற்றுக்கு வழிவகுத்துவிடும்.
அலர்ஜி: மகரந்தம், தூசி போன்றவை ஒவ்வாமை ஏற்படுத்தி சிலருக்கு ஆஸ்துமா ஏற்படும் ஆபத்தை அதிகரித்து விடும்.
உடல் பருமன்: உடல் பருமன், அல்லது அதிக எடையுடன் இருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.
வேலைத் தொடர்பான வெளிப்பாடுகள்: ஒரு சில நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ரசாயனங்கள், தூசி போன்றவறிற்கு அதிகமாக வெளிப்பட நேரலாம். இது அவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும்.
புகைப்பிடித்தல்: புகைபிடித்தல் அல்லது அந்தப் மற்றவர் புகைபிடிக்கும் போது நீங்கள் அதிகமாக அந்தப் புகையினை சுவாசிக்க நேர்ந்தால், அது உங்கள் மூச்சுக்குழாயை சேதப்படுத்தி ஆஸ்துமா ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
ஆஸ்துமா ஏற்படாமல் பாதுகாத்து நிர்வகித்தல்: ஆஸ்துமா ஏற்படும் காரணங்களை அறிதலே இதற்கு முதல் படியாகும். அந்தக் காரணங்களை அறிந்து முடிந்த வரை அவற்றைத் தவிர்த்தாலே நம்மால் இதனை எளிதில் நிர்வகிக்க முடியும். உதாரணமாக, உங்களுக்கு அலர்ஜி இருந்தால், அத்தகைய சூழலைத் தவிர்ப்பது அல்லது அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் பயனடையலாம்.
புகைபிடித்தால் அதனை நிறுத்த வேண்டும். அது மட்டும் அல்ல, மற்றவர் புகைப்பிடிக்கும் போது அந்தப் புகைக்கு வெளிப்படுவதைத் தவிர்ப்பது ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். ஏற்கனவே ஆஸ்துமா இருந்தால், நீங்கள் அடிக்கடி செக் அப் செய்து கொண்டு தேவைப்பதுடன் போது இன்ஹேலர்களை பயன்படுத்த வேண்டும். இதனை செய்தாலே நீங்கள் ஆஸ்துமாவை முடிந்த வரை எளிதில் சமாளித்து விடலாம்.