தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைமருத்துவம்

குழந்தையின்மை பிரச்சனையால் மன வேதனையை அனுபவிக்கிறீர்களா..? நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான்!

ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே உண்டு. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வானது ஒருவரின் பாலினம் மூலமாகவும் தீர்மானிக்கப்படுகிறது என்பதை பலர் அறிவதில்லை. ஏனெனில் ஆண்பால் மற்றும் பெண்பால் இடையே பல உடல் சார்ந்த வேறுபாடுகள் நிலவுகிறது.

அதுவே ஒரு பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நாம் கருத்தில் கொள்ளும் பொழுது, பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு குடும்பத்தை விருத்தி அடைய செய்வதற்கான விஷயமாக பார்க்கப்படுகிறது.

35 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில், குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை அணுக எந்த ஒரு தயக்கமும் காட்டக்கூடாது. கருக்கலைப்பு காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.

மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்களின் வயது, உடல் சார்ந்த சிக்கல்கள், ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு, வாழ்க்கை முறை அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

ஒரு பெண்ணுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தை கண்டுபிடிப்பது ஒரு சில சமயங்களில் சவாலான காரியமாக அமைகிறது. நோயை கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை வழங்குவது இதை எளிதில் குணப்படுத்த உதவும். மலட்டுத்தன்மைக்கான காரணம் என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலமாக, தேவையான பராமரிப்பு முறை மற்றும் அதற்கான சிகிச்சையை வழங்குவது நீங்கள் எதிர்ப்பார்த்த முடிவுகளைத் தர இயலும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எவ்வளவு விரைவாக ஒரு பெண் மருத்துவரை அணுகுகிறாரோ அவ்வளவு விரைவாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதோடு தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆபத்தும் குறைகிறது. பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த ஒரு சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஒரு பெண் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரையிலான கருமுட்டைகளுடன் பிறக்கிறாள். அதுவே ஒரு ஆணைப் பொறுத்தவரை அவர் தன் வாழ்நாள் முழுவதும் அல்லது வாழ்நாளின் பெரும்பகுதியில் விந்தணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருப்பார். இந்த கருமுட்டையானது ஒரு பெண் வயதுக்கு வரும் பொழுது ஒரு சில ஆயிரங்களாக குறைகிறது. மேலும் அது ஓவூலேஷன் என்ற செயல்முறைக்கு உட்படுகிறது.

காலபோக்கில் இந்த கருமுட்டைகளின் எண்ணிக்கையானது ஆயிரமாக குறைகிறது. அதன் பின்னர் மெனோபாசை அடைந்தவுடன் அது ஒரு சில நூறுகளாக குறைகிறது. காலத்தைப் பொறுத்து பெண்களின் கருமுட்டையின் எண்ணிக்கை மற்றும் தரமானது குறைய தொடங்குகிறது. ஆகவே ஒரு பெண்ணிற்கு வயதாகும் பொழுது அவர் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

24 முதல் 34 வயது வரை ஒரு பெண் சிறந்த இனப்பெருக்க ஆரோக்கியத்தை கொண்டிருக்கிறாள். 36 வயதிற்கு பிறகு இனப்பெருக்க ஆரோக்கியம் படிப்படியாக குறைய தொடங்குகிறது. ஒரு பெண் 40 வயதை அடையும் பொழுது அவள் இயற்கையாகவோ அல்லது IVF மூலமாகவோ கருத்தரிப்பதற்கான வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது.

30 களின் ஆரம்பத்தில் இருக்கக்கூடிய ஒரு சில பெண்கள், இவ்வளவு சீக்கிரமாக ஏன் மகப்பேறு நிபுணரை அணுக வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கின்றனர். எனினும், குழந்தையின்மை குறை ஆணிடம் இருந்தால் கூட, ஒரு நிபுணரை அணுகுவது என்பதே  ஒரு சிறந்த யோசனைதான். ஒரு நிபுணர் கூறும் ஆலோசனை மூலமாக நீங்கள் கருத்தரிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் குறையும் மற்றும் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை எப்பொழுதும் மனதில் கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker