சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ண இந்த யோகாசனத்தை டிரை பண்ணி பாருங்க!
உடல் பருமன் இன்று உலக அளவில் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று பலரும் பல விதமான முயற்சிகளில் ஈடுபாடு வருகின்றனர். அந்த வகையில், உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருபவர்கள் வளர்சிதை மாற்றத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிவார்கள். சிறந்த வளர்சிதை மாற்றம் உடல் எடையோடு நேரடியான தொடர்பைக் கொண்டுள்ளது. வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், அதிக கலோரிகள் எரிக்கப்படும். இதன் மூலம் உடல் எடை குறைகிறது. உடல் எடையை சரியான, பாதுகாப்பான மற்றும் இயற்கையான முறையில் குறைக்க சரியான அளவு கலோரிகள் எரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க ஆரோக்கியமான உடலை பராமரிப்பது, சமச்சீரான உணவு உண்பது மற்றும் வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வது போன்றவை உங்களுக்கு உதவக்கூடும். இதைத் தவிர யோகா பயிற்சியும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
யோகா பயிற்சி செய்வது நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை நாம் அறிவோம். யோகா பயிற்சிகள் வழங்கும் நன்மைகளில் ஒன்று வளர்சிதை மாற்ற செயல்முறையைத் தூண்டுவதாகும். வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு காரணமாக உள்ள எண்டோக்கரின் உறுப்புகளுக்கு வலு சேர்ப்பது முதல் அவற்றின் செயல் முறையை தூண்டுவது வரை யோகாசனம் பல நன்மைகளை அளிக்கிறது.
தெரியாதவர்களுக்கு, வளர்ச்சிதை மாற்றம் என்பது உணவை ஆற்றலாக மாற்ற உடலில் ஏற்படும் ஒரு உயிரி வேதியியல் செயல்முறையாகும். இது கலோரிகளை எரிக்கவும், அதன் மூலமாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இந்த வளர்ச்சிதை மாற்றத்தை சரியான முறையில் நடத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில ஆரோக்கியமான உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்தல், அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை உண்பது மற்றும் அன்றாட உடற்பயிற்சி போன்றவை இதில் அடங்கும். அது மட்டுமல்லாமல் யோகவானது சிறந்த வளர்சிதை மாற்ற செயல் முறையை தூண்டும் என்று கூறப்படுகிறது.
யோகா பயிற்சிகளை நாம் தொடர்ந்து செய்யும் பொழுது, அது எண்டோக்ரைன் அமைப்புகளைத் தூண்டுவதன் மூலமாகவும், அவற்றிற்கு வலு சேர்ப்பதன் மூலமாகவும் தேவையற்ற கலோரிகளை அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. யோகா பயிற்சிகளின் போது உடல் பல விதமாக வளையும், அப்போது ஏற்படும் அழுத்தம் எண்டோக்ரைன் அமைப்பு மற்றும் செரிமான அமைப்பின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, தூண்டுகிறது. இதன் காரணமாக அவற்றின் செயல்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது. மேலும் சீரான ரத்த ஓட்டம் மற்றும் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது.
விரைவான அல்லது அதிக அளவிலான வளர்ச்சிதை மாற்றம் அதிக அளவு கலோரிகளை எரிக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆகவே உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க நீங்கள் பயிற்சி செய்யக்கூடிய ஒரு சில யோகாசனங்கள் இதோ:-
உட்கட்டாசனம் :
இந்த ஆசனம் ஒரு நபர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அளிப்பதால் இது நாற்காலி போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் முதுகுத்தண்டு, இடுப்பு பகுதி மற்றும் இதய தசைகளை நீட்சி அடைய உதவுகிறது. அதோடு இது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, முதுகு வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனினும் கீழ் முதுகு வலி இருப்பவர்கள் உட்கட்டாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் உங்களுக்கு முட்டியில் காயம் ஏற்பட்டு இருந்தாலோ, அல்லது முட்டி பகுதியில் தாங்க முடியாத வலி இருந்தாலோ இந்த ஆசனம் உங்களுக்கானது அல்ல. அது மட்டும் இல்லாமல் அசிடிட்டி, வாயு பிரச்சனை, வயிற்று உப்புசம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
உட்கட்டாசனம் அதற்கான செய்வதற்கான வழிமுறைகள்:-
-
- முதலில் சமஸ்திதி நிலையில் ஆரம்பிக்கவும்.
-
- இப்பொழுது உங்கள் கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி உள்ளங்கைகளை சேர்ப்பதன் மூலமாக வணக்கம் வைக்கவும்.
-
- உங்களின் முட்டி மற்றும் குதிகால் நேர்கோட்டில்அமைந்திருக்கும் படி வைக்கவும்.
-
- உங்களது கவனம் உங்களின் உள்ளங்கைகளை நோக்கி இருக்க வேண்டும்.
-
- முட்டியை வளைத்து இடுப்பு பகுதியை லேசாக கீழ்நோக்கி கொண்டு செல்லவும்.
- உங்கள் முட்டியை 90 டிகிரி கோணத்தில் வளைப்பதன் மூலமாக, உங்கள் இடுப்பு பகுதி தரைக்கு இணையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆஞ்சநேயாசனம்:
அஞ்சனையின் மகனான ஹனுமான் கடவுளை தொடர்ந்து ஆஞ்சநேயா சனம் பெயரிடப்பட்டுள்ளது. இது லோ-லன்ஜ் போஸ் அல்லது அரை நிலவு போஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. அதோடு கொழுப்பை எரிக்கிறது, சிறந்த செரிமானத்தை தூண்டுகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் சரியான வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.
தலையை பின்னோக்கி வளைப்பதால், கழுத்து தசைகள் நீட்சி அடைகின்றன. தைராய்டு சுரப்பியைத் தூண்டி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. முட்டியில் ஏதேனும் காயம், சுளுக்கு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
ஆஞ்சநேயாசனம் செய்வதற்கான வழிமுறைகள்:
-
- மெதுவாக முன்னோக்கி வளைந்து, உங்களது வலது காலை இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையே வைக்கவும். பின்னர் உங்கள் இடது முட்டியை கீழ் நோக்கி வைத்து, கால் விரல்களை நீட்டவும்.
-
- உங்கள் தொடைப்பகுதி தரையில் சமமாக இருக்க வேண்டும். அதோடு உங்கள் மேல் உடலை வலதுபுறம் நோக்கி சாய்ப்பதை தவிர்க்கவும்.
-
- இப்போது உங்கள் வலது காலை தரையில் இருந்து மேல்நோக்கி தூக்கவும்.
-
- இப்போது உங்கள் வலது கால்களை உங்களால் முடிந்தவரை முன்னோக்கி நீட்டவும்.
-
- இதே நிலையில் உங்கள் கைகள் இரண்டையும் உயர்த்தி, உள்ளங்கைகளை சேர்த்து வணக்கம் வைக்கவும்.
-
- உங்கள் கைகளை உயர்த்தும்போது, கண்கள் மற்றும் மூக்கு வானத்தை நோக்கி பார்க்க வேண்டும். இப்போது முதுகை வளைக்கவும்.
- இதே நிலையில் ஒரு நிமிடம் இருந்து, அடுத்த காலில் இதையே செய்யவும்.