ஒரு பைசா செலவில்லாமல் ஒரே வாரத்தில் முகம் பிரகாசிக்க இதை செய்தால் போதும்.!
நாம் அனைவருக்கும் இயற்கையாகவே ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற ஆசை. அதற்காக பல ஆயிரம் கணக்கில் செலவு செய்து நாம் முக கிரீம்களை வாங்கி உபயோகிப்போம். ஆனால், அதனால் எந்த பலனும் கிடைக்காது. இயற்கையான முறையில் ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால் உங்களுக்கான சில உதவிக்குறிப்புகளை நாங்கள் கூறுகிறோம்.
விசேஷ நாட்களில் மட்டுமில்ல… தினமும் பிரகாசமாக முகத்தை பெற இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரித்து உபயோகிக்கவும். இதை, இரவு நேரங்களில் முகத்தில் உபயோகித்து வந்தால், ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் :
தேவையான பொருட்கள் :
பால் – ½ கப்.
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்.
செய்முறை :
ஒரு கிண்ணத்தில், பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் தயார்.
இப்போது, உங்கள் முகத்தை சுத்தமாக கழுவிய பின் முகத்தை ஈரம் இல்லாமல் துடைக்கவும். தயார் செய்து வைத்த பாலை, காட்டன் வைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.
இதை 30 நிமிடங்கள் வைத்து பின்னை குளிர்ந்த நீரை கொண்டு சுத்தம் செய்யவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய் – டீ ட்ரீ ஆயில் மாஸ்க் :
தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்.
தேயிலை மர எண்ணெய் – 3 முதல் 4 டீஸ்பூன்.
செய்முறை :
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். அதில், டீ ட்ரீ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இப்போது, உங்கள் முகத்தை சுத்தமாக கழுவிய பின் முகத்தை ஈரம் இல்லாமல் துடைக்கவும். இதையடுத்து, தயார் செய்து வைத்த இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவும்.
பின்னர், 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை ஒரு வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.