நீங்க எப்படி சால்னா செஞ்சாலும் கடையில கிடைக்கிற மாதிரி டேஸ்டா வரலையா? இந்த பொருளை சேர்த்து சால்னா வச்சு பாருங்க. அப்படியே ரோட்டு கடை சால்னா டேஸ்ல இருக்கும்.
இப்போதெல்லாம் உணவு வகைகளை அதிகமாக கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கம் வந்து விட்டது. அந்த வகையில் அதிகமாக வாங்குவது ரோட்டு கடைகளில் விற்கும் பரோட்டா தான். இதற்கு காரணம் அந்த பரோட்டாவை விட அதற்கு கொடுக்கும் சால்னாவின் ருசி தான். அதே சால்னாவை நாம் வீட்டில் வைக்கும் போது அந்த ருசி கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் தான். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு ஸ்பெஷல் சால்னாவை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். ரோட்டு கடை ஸ்பெஷல் சால்னா செய்முறை: இந்த சால்னா செய்வதற்கு முதலில் 2 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் 2 தக்காளி, 4 பச்சை மிளகாய் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். –
– இப்போது அடுப்பில் குக்கர் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு 2 ஏலக்காய், 2 துண்டு பட்டை கொஞ்சம் கல்பாசி, 2 கிராம்பு, 1ஸ்பூன் சோம்பு, 1 கொத்து கறிவேப்பிலை இவை எல்லாம் சேர்த்து பொரிந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கிய பிறகு 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாடை போக வதக்கிய பிறகு அரிந்து வைத்த தக்காளியை சேர்த்து நன்றாக குழைய வதக்கி விடுங்கள். அதன் பிறகு 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1 டீஸ்பூன் தனியா தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் உப்பு ன அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை லேசாக வதக்கி பிறகு அரை டம்ளர் தண்ணீர் மட்டும் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
இப்போது இந்த சால்னாக்கு தேவையான மசாலாவை அரைத்து விடுவோம். அதற்கு 1/2 கப் துருவிய தேங்காயுடன் 7 முழு முந்திரியை சேர்த்து நல்ல பயன் பேஸ்ட்டாக அழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ரோட்டு கடை சால்னாவில் சேர்க்கும் அந்த பொருளை சேர்த்து விடலாம். அந்த பொருள் வேறொன்றுமில்லை கடலை மாவு தான். ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து கொதித்துக் கொள்ளுங்கள். இதை சால்னாவில் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை விட்டு அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து பாருங்கள் நல்ல கமகமவென்று வாசனையுடன் ரோட்டு கடை சால்னா சூப்பராக தயார். இதையும் படிக்கலாமே: ரோட்டு கடை குட்டி போண்டா செய்முறை:(Bonda recipe in Tamil) இப்படி ஒரு முறை சால்னா செஞ்சு பாருங்க ரோட்டு கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் உங்கள் வீடுகளிலும் பரோட்டா சால்னா தயார். ட்ரை பண்ணி பாருங்க.