உறவுகள்புதியவை

கோபமாகவே இருக்கும் மனைவியை சமாதானம் செய்வது எப்படி?

கோபமாகவே இருக்கும் மனைவியை சமாதானம் செய்வது எப்படி?

கணவன் மனைவிக்குள் பிரச்சனை இல்லாத குடும்பம் இல்லை என்றே சொல்லலாம். மனைவியின் கோபத்துக்கு கணவனின் செயல் காரணமாக இருக்கலாம்.

மனைவியை சமாளிக்கும் சூட்சுமத்தை பல ஆண்கள் புரிந்து வைத்திருப்பதில்லை. உறவுகளுக்குள் உண்டாகும் சிறு விரிசலையும் அவ்வபோது சரி செய்து விட வேண்டும். இல்லையெனில் அவை வளர்ந்து பெரிதாகிவிட செய்யலாம். உங்கள் மனைவி உங்களை வெறுப்பதாக நீங்கள் உணர்ந்தால் அவரை சமாளிக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.

​புன்னகையோடு பேசிகொண்டே இருங்கள்

மனைவி கோபப்படுவதை நினைத்து நீங்களும் கோபத்தை வீசாமல். முதலில் மனைவியிடம் பேசுங்கள். அவர் உங்கள் மீது கோபமாக இருந்தாலும் நீங்கள் பதிலுக்கு கோபத்தை காண்பிப்பதை விட உங்கள் தவறு இருந்தால் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள்.

உங்கள் மீது அவர் சொல்லும் தவறுகளை பொறுமையாக கேளுங்கள். என்ன புகார் செய்தாலும் அந்த நேரத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

​அவருடன் நேரம் செலவிடுங்கள்

உங்கள் மனைவி உங்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்திய பிறகு அவரது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட பிறகு உங்களை நீங்கள் மாற்றி கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுடைய சில கெட்ட பழக்கங்களால் அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டால் அவர்கள் அதை விரும்பா விட்டால் அதை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் அவர் மீது அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதையும் அவரிடம் காட்டுங்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் நேரம் கிடைக்கும் போது அவருடன் செலவிடுங்கள். பரிசுகள் தருவதை காட்டிலும் இது சிறப்பாக பலன் தரும்.

​பொறுப்புகளை பகிருங்கள்

குடும்பத்தில் எல்லாமே நான் தான் என்று இது வரை நீங்கள் இருந்தால் அதை மாற்றிகொள்ளுங்கள். மனைவி வீட்டு பொறுப்பு முழுக்க பார்க்க வேண்டும் என்றில்லாமல் நீங்களும் அவர்களது பொறுப்பை பகிர்ந்து கொள்ள வர வேண்டும்.

குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் கவனித்து அவருக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தால் அவர் தனியாக இல்லை அவருடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை பாதுகாப்பாக உணர்ந்து உங்களுடன் ஒன்றிவிடுவார்.

​முயற்சிகளை பாராட்டுங்கள்

அவர் உங்களுக்கு செய்யும் அனைத்து விஷயத்துக்கும் ஒரு புன்னகையோடு பாராட்டையும் சேர்த்து செய்து விடுங்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை பராமரிக்க கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் எவ்வளவு பாராட்டுகிறீர்கள் என்பதை அவருக்கு சொல்லுங்கள்.

அவரது தோற்றத்தில் இருக்கும் சிறிய மாற்றத்தையும் பாராட்ட தவறாதீர்கள். புதிய விஷயங்கள் ஒவ்வொன்றிலும் உங்கள் பாராட்டு அவரை மேலும் உற்சாகமாக குடும்பத்துடனும் உங்களுடனுமான பிணைப்பை உண்டாக்கும்.

​​கோபத்தை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் இருவருக்கும் தனிப்பட்ட காரணங்களால் உங்கள் மனைவி உங்களை வசைபாடிக்கொண்டே இருக்கலாம். தவறு செய்யாத போது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். வாக்குவாதத்தின் போது நீங்கள் ஆக்ரோஷமாக பேசினால் அவர் விரக்தியடையலாம்.

நீங்கள் அமைதியாக இருந்தால் அவர் இறுதியாக குளிர்ச்சியடைவார். மனைவியின் கோபத்தை அமைதியாக கையாண்டாலே உங்களது சமாதானம் வேகமாக எட்டும்.

​தனியாக நேரம் செலவிடுங்கள்

மனைவியின் பெரும்பாலான கோபமே தன்னுடன் நேரம் செலவிடாமை தான். அதனால் எப்போதும் வேலை என்று அழுத்தமாக இருக்க வேண்டாம். இது மனைவியின் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மனைவியுடன் நேரம் ஒதுக்குவது மட்டும் அல்லாமல் அவ்வபோது வெளியே அழைத்து சென்று மனம் விட்டு பேசுவதும் உங்களுக்குள் ஆன இடைவெளியை குறைக்க செய்யும்.

அருகில் இருக்கும் இடங்கள் என்று இல்லாமல் இரண்டாம், முன்றாம் தேனிலவு போன்று பிடித்த இடங்களுக்கு சென்று தங்கி வருவதும் உங்கள் மனைவியின் மனதில் இடம்பிடிக்க உதவும்.

​மனைவி பற்றி சிந்தியுங்கள்

சில நேரங்களில் இருவருக்கும் நடந்த வாக்குவாதம் பற்றி மட்டும் சிந்திக்காமல் சிறிது நேரம் தனியாக அமர்ந்து சிந்தியுங்கள். இக்கட்டான சூழலில் அங்கேயே உட்கார்ந்து அதையே நினைப்பதை தவிர வேறு கண்ணோட்டத்தில் பார்க்க விலகி சென்று யோசிப்பது பலன் கிடைக்கும்.

மனைவியின் அன்பு வழக்கம் போல் இல்லை. எப்போதும் சண்டை என்று நினையாமல் தள்ளி நின்று எங்கு தவறு உங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு எதில் மகிழ்ச்சியாக இருந்தீர்கள் எப்போது உங்களுக்குள் பிரச்னை தொடங்கியது. அதற்கான காரணம் போன்றவற்றை யோசியுங்கள்.

​குடும்ப நல ஆலோசகரை அணுகுங்கள்

உங்கள் மனைவி வெறுப்பை மட்டுமே காட்டினால் ஆலோசனை மூலம் உங்கள் வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியாக்க செய்யலாம். உங்கள் மனைவி உங்களை விட்டு வெகுதூரம் விலகினாலும் காரணம் அறிந்து மாற்ற முயற்சிக்க வேண்டும். குடும்பத்தின் மீதான ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்.

ஆணுறை : காண்டம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

மனைவியின் வெறுப்பு சற்றும் குறையாத நிலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீணாகும் நிலையில் இப்படியே தொடர்வது உறவுக்குள் அதிக விரிசலை உண்டாக்கிவிட செய்யலாம். அதனால் உங்கள் இருவரின் மனநிலையையும் அறிந்து ஆலோசனை செய்ய குடும்ப நல ஆலோசகரை சந்தித்து ஒளிவு மறைவு இல்லாமல் பிரச்சனைகளை பேசி தீர்ப்பது உங்கள் உறவு விரிசல் இல்லாமல் பாதுகாக்க செய்யும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker