ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

வீடுகளில் வளர்க்கும் செடிகளின் மருத்துவ குணங்கள்….!

வீடுகளில் வளர்க்கும் செடிகளின் மருத்துவ குணங்கள்....!

நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க உதவக்கூடியவை.

துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து  குடிக்கலாம்.
தூதுவளை: சளித் தொந்தரவுகளைப் போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால்  ஜலதோஷம் தீரும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவருவது புற்றுநோயைக்கூடத் தடுக்கும்.
ஆடாதொடை: சளி, இருமல், தொண்டைக் கட்டுக்கு ஆடாதொடை நல்மருந்து. இதன் இலையை மட்டும் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்தால் ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் குணமாகும். காச நோயாளிகள் 40 நாள்கள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டால்  அதன் தீவிரம் குறையும்.
ஓமவல்லி: இருமல், சளி, ஜலதோஷத்துக்கு ஓமவல்லி முக்கிய மருந்து. இதன் இலைச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். மழைக்காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி பஜ்ஜி செய்து  சாப்பிடலாம்.
கற்றாழை: கற்றாழை ஜூஸ் சாப்பிட்டால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் விலகும். சர்க்கரை நோயாளிகள் தினமும் கற்றாழை ஜூஸ்  அருந்தினால், சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். கற்றாழையின் வேர் தாம்பத்ய உறவு மேம்பட உதவும்.
வெற்றிலை: குழந்தைகளுக்கு சளி, இருமலின்போது, ஒரு வெற்றிலையுடன் ஐந்து துளசி இலை சேர்த்து சாறு பிழிந்து 10 சொட்டுக்  கொடுத்தால் குணமாகும். நெஞ்சுச்சளி இருந்தால் அது மலத்துடன் வெளியேறிவிடும். பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு கொடுத்தால்,  விஷம் முறிந்துவிடும்.
நொச்சி: நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடித்தால் சளி, இருமல் விலகும். தலையணையின் அடியில் நொச்சி  இலையை வைத்துத் தூங்கினால் தலைபாரம், சைனஸ் தொந்தரவு நீங்கும்  மிளகு, பூண்டுடன் நொச்சி இலையைச் சேர்த்து மென்று தின்றால்  ஆஸ்துமா குணமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker