புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
புதன் நவம்பர் 21 ஆம் தேதி அதிகாலை 04.37 மணிக்கு துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். பிறகு இந்த ராசியில் இருந்து புதன் டிசம்பர் 10 ஆம் தேதி அதிகாலை 05.53 மணிக்கு தனுசு ராசிக்கு செல்லவிருக்கிறார். இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் புதன் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்தமாதிரியான பலன்களைத் தரப் போகிறார் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். எதிர்பாராத செலவுகளுக்கு சேமிப்பைப் பயன்படுத்த நேரிடும். எதிர்பாராத இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எதிர்மறையான சிந்தனையுடன் இருப்பீர்கள். எனவே தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வணிக கூட்டாளிகள் உங்களை ஏமாற்றலாம் அல்லது உங்களிடம் சில முக்கியமான விஷயங்களை மறைக்கலாம். மூன்றாம் நபரால் திருமண வாழ்க்கையில் இடையூறு ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைத்து நல்ல காலமாக அமையும்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வேலை இழப்பிற்கு வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் பாதுகாப்பின்மை ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். நிதி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். உங்களின் ஜாதகத்தில் புதன் சந்திரன் மற்றும் சுக்கிரனுடன் நல்ல உறவில் இருந்தால், எதிர்பாராத லாபத்தையும், நல்ல வருமானத்தையும் பெற முடியும். திருமணமாகாதவர்கள் புதிய உறவைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களுடைய பொழுதுபோக்குகளைத் தொடர்வதன் மூலம் அமைதியான மற்றும் சந்தோஷமான நேரத்தை அனுபவிப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்கள் குடும்பத்தினர் உங்களை தவறாக புரிந்து கொள்ளலாம். பணப் பிரச்சனைகளை உங்களை வருத்தமடையச் செய்யலாம். இக்காலத்தில் உங்கள் தொழிலில் அதிக வேலையின் காரணமாக உங்களால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது கடினமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குறுகிய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நீங்கள் தொடர்பு கொள்ளும் விதத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நடத்தையில் விரக்தியை மற்றவர்கள் கவனிக்கலாம்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த காலகட்டத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். உங்கள் ஜாதகத்தில் புதன் குருவுடன் நல்ல அம்சத்துடன் இருந்தால், அது உங்கள் தொழில் வாழ்க்கையை ஆதரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதிய வணிக யோசனைகள் உங்கள் மனதில் தோன்றலாம். இந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள் முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் பெற்றோர் சொத்துக்களைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மன கவலை இந்த காலக்கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இக்காலத்தில் தூக்கமில்லாத பல இரவுகளை சந்திக்க நேரிடும். மேலும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் எந்த முக்கிய முடிவுகளிலும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார்.இதனால் இக்காலத்தில் நீங்கள் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவீர்கள். நல்ல வருமான ஆதாரங்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் விரிவாக்கத்தைக் காணலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். தொழில் ரீதியாக வெளிநாட்டில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மேற்படிப்பு படிக்க நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் பிடித்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். இக்கால கட்டத்தில் நீங்கள் ஒரு தொண்டு சமூகத்துடன் இணைய விரும்பி தொண்டாற்றுவீர்கள். மேலும் இக்காலத்தில் உங்கள் பெற்றோருடன் வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடலாம்.