சமையல் குறிப்புகள்புதியவை

ஸ்வீட் கார்ன் கிரேவி

ஸ்வீட் கார்ன் கிரேவி

தேவையான பொருட்கள்:

* ஸ்வீட் கார்ன் – 1 கப்

* தண்ணீர் – 1 கப் (கார்னை வேக வைப்பதற்கு)

* கெட்டியான தேங்காய் பால் – 1 கப்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (அரைத்தது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)

செய்முறை:

* முதலில் குக்கரில் ஸ்வீட் கார்னை போட்டு, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போதும் குக்கரைத் திறந்து நீரை வடித்துவிட வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் வேக வைத்துள்ள கார்னை நீருடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் தேங்காய் பால் சேர்த்து கிளறி, ஒரு கொதி வந்ததும், மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஸ்வீட் கார்ன் கிரேவி தயார்.

குறிப்பு:

* வேண்டுமானால் இதில் தேங்காய் பாலுக்கு பதிலாக வழக்கமான பாலை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஃப்ளேவர் வேறுபடும்.

* தக்காளியை அரைத்து பயன்படுத்துவதற்கு பதிலாக, பொடியாக நறுக்கியும் பயன்படுத்தலாம்.

* சுவையை மேலும் அதிகரிக்க ஒரு டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.

* தேங்காய் பால் சேர்த்ததும் அதிகம் கொதிக்கவிடாதீர்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker