தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளை அதிகம் மிரட்டினால் ஆபத்து

குழந்தைகளை அதிகம் மிரட்டினால் ஆபத்து

குழந்தைகளை அதிகம் மிரட்டினால் ஆபத்து
பொதுவாகவே குழந்தைகள் வளர வளர தங்களைச் சுற்றியுள்ள சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள். நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். அதனால், பெற்றோர் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், எரிச்சல், கோபத்தைக் குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும். அதைப் புரிந்துகொள்ளும்போது குழந்தைகள் பெற்றோருக்கு உதவ முன்வருவார்கள். மாறாக அவர்களுக்குப் புரியவைக்காவிட்டால் அவர்களிடமிருந்து வரும் எதிர்வினைகள் வேறுவிதமாக இருக்கும்.

* பயம் – பெற்றோருக்கு ஏற்படும் மனபாதிப்புகள் தங்களை எந்த வகையிலாவது பாதித்துவிடுமோ என்ற பயம் குழந்தைகளிடம் ஏற்படலாம்.

* கோபம் – எதற்கெடுத்தாலும் பெற்றோர் கோபமடைந்தால், பதிலுக்குக் குழந்தைகளும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

* குற்றவுணர்வு – தன்னால்தான் தொந்தரவு ஏற்படுகிறது என்று எண்ணி தன்னைத்தானே குற்றவாளியாகக் கருதும் குழந்தைகளும் உண்டு.
பயம்

* சோகம் – குழந்தைகளுக்குப் பெற்றோர்தான் உலகம் என்பதால், அவர்கள்மீது அதீத அன்பு வைத்திருப்பார்கள். எனவே, அவர்கள் சோகமாயிருக்கும்போது குழந்தைகளும் சோகமாகிவிடுவார்கள்.

* படபடப்பு – பெற்றோரது மாற்றுச் செயல்பாடுகளால் ஒருவித பயத்துக்குள்ளாகி நீண்டநேரம் அழுவது, படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களால் படபடப்பை வெளிப்படுத்துவார்கள்.

* ஆதரவு – சில புத்திசாலிக் குழந்தைகள் பெற்றோருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். பெரியவர்களைப்போல `நீங்க ரெஸ்ட் எடுங்க; நான் வேலை செய்றேன்… இனிமே குறும்பு செய்யாம இருப்பேன்’ என்று கூறுவதும் தங்களது தவறுகளைத் தாங்களே திருத்திக் கொண்டு அதைச் சொல்லி பெற்றோரை உற்சாகப்படுத்துவதும் உண்டு.

குழந்தைகள் எதையும் உற்றுநோக்கும் திறன் பெற்றவர்கள். குறிப்பாக தங்களின் பெற்றோரின் நடவடிக்கைகளை உளவுத்துறைபோல கவனிப்பார்கள். ஏதேனும் ஒரு கண்ணாடிக் கோப்பை தவறி கீழே விழுந்தாலும் அதற்காகக் கத்தி கூச்சலிடும் பெற்றோரே அதிகம். என்ன கத்தினாலும் உடைந்த கோப்பை திரும்பி ஒட்டப்போவதில்லை. ஆகவே, குழந்தைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், கவனமாகச் செயல்படக் கற்றுத் தருவது குழந்தையை நிதானமடையச் செய்யும்.

குழந்தையின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

* அண்டை வீட்டாரிடமும் ஆரோக்கியமாகப் பழகும் சூழலை உருவாக்கித் தரவேண்டும்.

* உணர்வுகளை வெளிப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

பெற்றோர் தங்களது நட்புகளை ஆரோக்கியமாகப் பேணுவதுடன் தொழிலில் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு அதனால் எந்தவிதமான மோசமான விளைவும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்!”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker