தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

சீரற்ற மாதவிடாய் வருபவர்கள் எப்படி கருமுட்டை வெளிவரும் நாளைக் கணக்கிடுவது?

எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

இந்த 28 நாளில் முதல் 4 – 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.

இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம்.

இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், தொடர்ந்து உங்களது மாதவிலக்கு வரும் தேதியை காலண்டரில் குறித்து வரலாம்.

உதாரணத்துக்கு, உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி 30 நாட்கள் என்றால், 16-ம் நாள் கருமுட்டை வெளிவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை எந்த நாளிலோ ஒரு நாள் கருமுட்டை வெளிவரலாம் என யூகித்துக் கொள்ளலாம். இந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

11-16ம் நாள் வரை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், 11,12,13 நாட்கள் ஓரளவுக்கு கருத்தரிக்க வாய்ப்பு இருக்கும். 14,15,16 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கும்.

இன்னும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி கணக்கிடுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உங்களால் இப்படி கணக்கிட முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் (Play Store), பீடியட் டிராக்கர் (Period tracker, ovoluting period) என்று போட்டு தேடினால், நிறைய ஆப்கள் வரும். அதில் ஒன்று தேர்ந்தெடுத்து உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு மாதவிலக்கு வரும் நாட்களை அதில் குறித்து வைத்தால் மட்டும் போதும். இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

அந்த காலண்டரிலே உங்களுக்கான ஓவல்யூஷன் நாள் (கருமுட்டை வெளிவரும் நாள்) அதில் காண்பிக்கும். எந்த நாளில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள், எந்த நாளில் கருத்தரிக்க குறைவான வாய்ப்புகள் என்று காண்பிக்கும்.

அப்போது நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் கரு உருவாக வாய்ப்புகள் அதிகம்.

எந்தக் குழப்பமும் இல்லாமல் சுலபமாக, கருமுட்டை வெளிவரும் நாளை நீங்கள் இந்த ஆப்ஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாழ்த்துகள்…

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker