உலக நடப்புகள்புதியவை

புதன் மிதுன ராசிக்கு செல்வதால் சிக்கலில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக கருதப்படும் புதன் ஒருவரது ராசியில் சிறப்பான நிலையில் இருந்தால், அந்த ராசிக்காரர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார். அதுவே புதன் தவறான நிலையில் இருந்தால், அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாளுவார்.

இத்தகைய புதன் 2021 மே 26 ஆம் தேதி அதிகாலை 7.50 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த மிதுன ராசியில் புதன் ஜூன் 3 ஆம் தேதி வரை இருக்கும். இப்படி மிதுன ராசிக்கு செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்தமாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இக்காலம் இளைஞர்களுக்கு அருமையான நேரமாக இருக்கும். எழுத்து, பத்திரிகை, ஊடகம், ஜோதிடர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிகளையும் வளர்ச்சியையும் அனுபவிப்பார்கள். வணிக நோக்கங்களுக்காக குறுகிய பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, உங்களுக்கு நல்ல காலம். நீண்ட காலமாக திருப்பிக் கொடுக்காமல் இருந்த கடன்களை செலுத்த வாய்ப்புள்ளது. உங்கள் தந்தையின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களின் நோயெதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். உங்களைத் தாக்கும் எந்த ஒரு நோய்த்தொற்றில் இருந்தும் விரைவில் குணமாவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இந்த காலத்தில், இந்த ராசிக்காரர்கள் குடும்ப விஷயங்களில் அதிகம் ஈடுபடுவார்கள். மேலும் இக்காலத்தில் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள். பேசும் போதும் வார்த்தைகளை கவனமாக பார்த்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக, இந்த காலம் லாபத்தைத் தரும் மற்றும் உங்களின் செல்வம் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதற்கு அதிகம் செலவிடுவீர்கள். தொழில் ரீதியாக, அலுவலக அரசியலில் இருந்து விலகி உங்கள் சொந்த வேலையில் கவனத்தை செலுத்துவது சிறந்தது. மாணவர்கள் தங்களின் கல்வியில் நிலையான முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. காதல் விஷயங்களில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தைராய்டு பிரச்சனை கொண்டவர்களுக்கு இக்காலம் ஓரளவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது உங்களுக்கு மன அழுத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தும்.

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறது. இந்த காலத்தில் மன ரீதியாக வலுவாக இருப்பீர்கள். நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மேலும் இக்காலத்தில் நீங்கள் தெளிவாக சிந்திக்கவும், திறமையாகவும் தொடர்பு கொள்வீர்கள். தொழில் ரீதியாக, அரசியலில் நுழைய ஆர்வமுள்ளவர்களுக்கு சாதகமான காலம். விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற தொழில்களில் உள்ளவர்களும் இந்த காலகட்டத்தில் பயனடைவார்கள். வணிகர்களும் தங்கள் வணிகத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் புதனின் அம்சத்திற்கு ஏற்றவாறு, உங்கள் துணையுடனான உங்கள் உறவை வலுப்படுத்த உங்களுக்கு சிறந்த நேரம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆற்றல் நிறைந்திருப்பீர்கள். மேலும் அனைத்துவிதமான செயல்பாடுகளிலும் சிறப்பாக ஈடுபடுவீர்கள். ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிக்க சிறந்த காலம் இது.

கடகம்

கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களிடம் உள்ள வளங்களை எளிதாக நிர்வகிக்க முயற்சிக்க வேண்டும். இக்காலகட்டத்தில், நீங்கள் எல்லோரிடமிருந்தும் கொஞ்சம் தனிமைப்படுத்தப்படுவீர்கள். எனவே உங்களைப் பற்றி முழுமையாக அறிய போதுமான நேரத்தை எடுக்கவும். உங்களை மேம்படுத்த போதுமான ஓய்வை எடுக்கவும். மேலும் இக்காலத்தில் எந்த ஒரு மோதல்களில் இருந்தும் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது உங்களின் நற்பெயரை பாழாக வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, உங்கள் தொழில் வளர்ச்சிக்கான வேலைகளை மாற்ற சில புதிய திட்டங்களை உருவாக்க முயலுங்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை வளர்க்கவும் விரிவாக்கவும் முயற்சிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நிதி ரீதியாக, எந்தவொரு கடனையோ அல்லது எந்தவிதமான நிதி உறுதிமொழிகளையோ அல்லது முதலீட்டையோ எடுக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தால் அவதிப்படக்கூடும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் முன்னுரிமைகளில் கவனத்தை செலுத்துவார்கள். மறுபுறம், சிலர் தங்கள் உறவுகளின் முரணாக இருப்பார்கள். எனவே உறவுகளை மேம்படுத்த முயற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள் மற்றும் பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவீர்கள். முக்கியமாக இக்காலத்தில் நீங்கள் மிகவும் பிரபலமான ஒருவராக உணர்வீர்கள். ஆசைகளை நிறைவேற்ற சாதகமான காலம் இது. பங்கு தரகர்கள், மேலாளர்கள், கணக்காளர்கள், சமூக சேவையாளர்களாக பணிபுரிபவர்களுக்கு நல்ல காலம். மேலும் இந்த காலத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். உறவைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் மற்றும் காதலிப்பவர்கள் சில ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பார்கள். ஆனால் சரியான தகவல் தொடர்பு மூலம் அதை தீர்க்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இக்காலத்தில் உங்களின் பணிகளை முடிக்க ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் தொழில், நற்பெயர் ஆகியவற்றில் உங்கள் கவனத்தை செலுத்துவீர்கள். இந்த கட்டத்தில் தந்தை, அரசு போன்றவர்களுடனான உங்கள் உறவு மேம்படும். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு நன்றாக இருக்கும். பத்திரிகை, கணக்காளர், எழுத்தாளர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள், கணிதவியலாளர், சி.ஏ, அரசியல்வாதிகள், அரசு நிர்வாகிகள் போன்றவர்களுக்கு இக்காலம் வெற்றிகரமாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, இந்த காலத்தில் நீங்கள் மிகவும் சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தினமும் வாக்கிங் செய்வது, உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள புதன் உங்களை ஊக்கமளிக்கும். உயர் கல்விக்காக வெளிநாட்டு பயணத்தில் ஏற்படும் தாமதத்தால் சிலர் சற்று ஏமாற்றமடைவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, உங்கள் துணை நீங்கள் அவரிடமிருந்து விலகுவது போன்று உணர்வார்கள். எனவே இதைத் தவிர்க்க அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சாதகமான காலம். இருப்பினும், இன்னும் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் ஒருசில உடல் செயல்பாடுகளில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் சில லாபங்களை எதிர்பார்க்கும் இக்காலத்தில் இழப்புக்களையும் சந்திக்கக்கூடும். ஆனால் அதற்காக உங்களின் நிதி நிலைமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தொழில் ரீதியாக, துப்பறியும் நபர்கள், சிறுபான்மையினர், எண்ணெய் ஆய்வாளர்கள், புதையல் வேட்டைக்காரர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் வளர்ச்சியைப் பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் தங்கள் துணை கோபத்தால் கடுமையாக பேசுவதைக் காணலாம். ஆனால் சரியான தகவல் தொடர்பு மற்றும் பொறுமையாக அவர்களின் பேச்சை செவி கொடுத்து கேட்டு, அவர்களுடன் சில தரமான நேரத்தை செலவிடுவதன் மூலம் சிக்கல்கள் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தரை, சரியான மருத்துவ பரிசோதனை செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொடர்பு கொள்ளும் திறன் கணிசமாக மேம்படும். இருப்பினும், நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தொழில் ரீதியாக, பணியிடத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வக்கீல், ஒப்பந்தக்காரர்கள், திருமண ஆலோசகர், அரசியல்வாதி மற்றும் நிர்வாக வர்த்தகர்களின் தொழில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் இந்த காலக்கட்டத்தில் செழிப்பாக இருப்பார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, ஆக்கப்பூர்வமான தொடர்பு அல்லது கவனச்சிதறல்கள் மூலம் உங்கள் துணையின் ஆதிக்கத்தை உணர்வீர்கள். இக்காலத்தில் காதல் மலர வாய்ப்புள்ளது. காதலிப்பவர்கள் தங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு திட்டமிட சிறந்த காலம் இது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் எடையைக் குறைக்க விளையாட்டு அல்லது பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

மகரம்

மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் தொழில் ரீதியாக, உங்கள் பணியிடத்தில் இருக்கும் எந்தவிதமான மோதல்களையும் நீங்கள் தீர்ப்பதாக உணர்வீர்கள். வக்கீல்கள், நிதி ஆலோசகர்கள், வரி திட்டமிடுபவர்கள் ஆகியோரின் தொழில் செழிக்கும். தனிநபர்கள் வேலையிலும் பணியிடத்திலும் மகத்தான வெற்றியைக் காண்பார்கள். இந்த நேரத்தில், உங்கள் பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் நிதி ரீதியாக நீங்கள் பயனடைவீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை, தாய்வழியில் இருந்து நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். இக்காலத்தில் காதல் விஷயங்கள் கொஞ்சம் தீவிரமாக இருக்கும். இது உங்கள் உறவுகளில் சிக்கல்களைக் கொண்டு வரும். திருமணமானவர்கள், தங்கள் துணைக்கு கவனம், அக்கறை மற்றும் அரவணைப்பு தேவை என்பதை உணர்வார்கள். போட்டி மற்றும் அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களின் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு ஆகியவை நேர்மறையான முடிவுகளாக மாறுவதைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும். இது உங்களை சொத்துக்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும். தொழில் ரீதியாக, பங்குச் சந்தி, சினிமா, டிவி, நடிப்பு போன்றவற்றில் உள்ளவர்கள், தங்களின் வாழ்க்கையில் வளர்ச்சியைக் காணலாம். பண்டைய வேதங்களைப் படிப்பதற்கான சிறந்த நேரம் இது. உறவுகளைப் பொறுத்தவரை, காதல் உச்சத்தில் இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அடிவயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அவ்வப்போது பரிசோதனையையும் செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

மீனம்

மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறது. இதனால் இக்காலத்தில் உங்கள் வீட்டில் அமைதியும், நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாக, இக்காலத்தில் பணத்தை கார் அல்லது வீடு போன்ற நிலையான சொத்துக்களில் செலவிடலாம். தொழில் ரீதியாக, வாழ்வில் வளர்ச்சி அடைய பணியிடத்தில் சோம்பலைத் தவிர்த்து புத்திசாவித்தனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த கட்டத்தில் ரியல் எஸ்டேட் அல்லது வீட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பயனடைவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, உங்கள் துணை பணியிடத்தில் வெகுமதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இருப்பினும் தியானம், யோகா போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது உங்களுக்கு இன்னும் நிறைய பயனளிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker