குழந்தைகளை இப்படி படுக்க வைக்காதீர்கள்..!
பிறந்த குழந்தைகளை தூங்கவைப்பது எளிதான காரியமல்ல. உடலை நெளிந்து கொண்டே இருக்கும் சில குழந்தைகள் பகலிலும் தூங்காது, இரவிலும் தூங்காது. தாயின் கருப்பையில் இருந்த குழந்தைகளுக்கு புதிய சூழலை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். பிறந்த குழந்தைகள் ஏறத்தாழ 17 மணி நேரம் தூங்க வேண்டும் என குழந்தைகள் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், அவர்களை சரியாக படுக்க வைத்து, தூங்க வைப்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் முதுகு பகுதி நெகிழ்வு தன்மையுடன் இருக்கும் என்பதால், குறுகிய நிலையில் உறங்க வைப்பது சரியானதாக இருக்கும். திரும்பி படுக்கத் தொடங்கும் வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எப்படி படுக்க வைக்க வேண்டும்? : தாயின் கருப்பையில் குறுகிய நிலையில் அரவணைப்புடன் இருந்த குழந்தைகளுக்கு, பிறந்தவுடனும் அந்த அரவணைப்பு தேவைப்படும். தாயுடன் இருக்கும்போது அரவணைப்பாக உணரும் குழந்தைகளுக்கு, தொட்டில் இருக்கும்போது அதேபோன்றதொரு நிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வயிற்று பகுதி அழுத்தக்கூடாது. ஏனென்றால், அவர்களின் சுவாசத்தைக் கடுமையாக பாதிக்கும். தொட்டில் அல்லது பாய் என எங்கு படுக்க வைத்தாலும் முதுகுபகுதி கீழ் இருக்குமாறு படுக்க வைக்க வேண்டும்.
ஒருவேளை குழந்தையின் வயிற்று பகுதி அழுத்துவதை கவனிக்க தவறிவிட்டால், சுவாசப் பிரச்சனையால் உயிரிழக்கக்கூட நேரிடும். இதனை sudden infant death syndrome (SIDS) என்பர். ஓராண்டுவரை குழந்தைகள் முதுகு பகுதி கீழ் இருக்குமாறு படுப்பது அவர்களுக்கு நல்லது என அமெரிக்கன் அகாடமி ஆப் பிடீயாட்டிரிக்ஸ் கூறுகிறது. 4 முதல் 5 மாதங்களிலேயே குழந்தைகள் குப்புற படுக்கத் தொடங்கிவிடுவார்கள் என்றாலும், பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒருமுறை குப்புற கவிழ்ந்துவிட்டால், அவர்களுக்கு தூங்குவதற்கு ஏற்ற நிலையை உங்களால் கண்டுகொள்ள முடியும். குழந்தைகள் முகுதுபுறத்தில் நீண்ட நேரம் படுக்கும்போது, நெகிழ்வுதன்மையுடன் இருக்கும் எலும்புகள் மெல்ல திடமாக தொடங்கும், உடலுக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.