ஆரோக்கியம்புதியவை

எவ்வளவு வயதானாலும் காது கேட்கும் திறன் ஷார்ப்பாக இருக்க வேண்டுமா? எளிதான இந்த விடயத்தை செய்யுங்கள்!

தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே திரிகிறோம்.

 வேலைபளுவை குறிக்கிறோம் என்பதற்காக, 24 மணிநேரமும் ஹெட்போன் வழியாக பாடல் கேட்பது நமது பொழுதுப்போக்காக மாறிவிட்டது.

இதன் காரணத்தால் இன்று காது கேட்கும் திறனும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இதோடு தொலைக்காட்சியில் அதிக ஒலியை வைப்பது போன்ற விடயங்களை செய்கிறோம். இது போன்று செய்வதால் காது கேட்கும் திறன் குறைகிறது.

எவ்வளவு வயதானாலும் காது கேட்கும் திறன் நன்றாகவும், ஷார்ப்பாகவும் இருக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்.

புகையிலை பழக்கம் அந்நபரின் காது கேட்கும் திறனை மெல்ல, மெல்ல குறைய செய்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகைக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடவும்.

காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் கண்டத்தைவிட்டு காதை நோண்ட வேண்டாம். மேற்புறமாக தினமும் குளித்து முடித்த பிறகு காதுகளை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி ஏதேனும் பிரச்சனை போன்று உணர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

ஆன்டி-பயாடிக், புற்றுநோய் மருந்துகள் என 200க்கும் மேற்பட்ட மருந்துகள் காத்து கேட்கும் திறனை குறைக்கும் தன்மை கொண்டவை. அதிகமாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது கூட காத்து கேட்கும் திறனை பாதிக்கும்.

ஹெட்போன், டிவி, கேம் ஆடும் போது அதிக சப்தம் வைத்து கேட்க வேண்டாம். உங்கள் காதை குறைந்த சப்தத்தை கேட்டுணர பழக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சப்தத்தை குறைத்து கேட்கும் போது, உங்கள் காதுகள் தானாக அதற்கு ஏற்ப பழகிவிடும்.

நாள் முழுக்க நான் ஓடிக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைவதை போல, நாள் முழுக்க சத்தத்தை கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளும் சோர்வடைந்துவிடும். எனவே, தினமும் ஓரிரு மணிநேரம் அமைதியான இடத்தில் அமர்ந்து செவிகளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker