அழகு..அழகு..புதியவை

முட்டையில் இவ்வளவு அழகுக்குறிப்புகள் இருக்கா..?

உடல் உள்ளுறுப்புகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகளை கொடுக்கும் முட்டையில் முகத்தை பொலிவாக்கவும், முடியை வலுவாக்கும் அழகு குறிப்புகளும் பொதிந்துள்ளன. ரசாயன மருந்துகளை பயன்படுத்தி பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க விரும்பாதவர்கள், இயற்கையான முறையில் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். முட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய எளிமையான அழகு குறிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.”>

உடல் உள்ளுறுப்புகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகளை கொடுக்கும் முட்டையில் முகத்தை பொலிவாக்கவும், முடியை வலுவாக்கும் அழகு குறிப்புகளும் பொதிந்துள்ளன. ரசாயன மருந்துகளை பயன்படுத்தி பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க விரும்பாதவர்கள், இயற்கையான முறையில் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். முட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய எளிமையான அழகு குறிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வயதான தோற்றம் : பல்வேறு காரணங்களால் இளமையாக இருக்கும்போதே முகம் வயதானவர்களைப் போல் இருக்கும். தோல் சுருக்கம் மற்றும் மங்கிய முகம் ஆகியவை அவர்களின் அழகை பாதிக்கும். இதுபோன்ற வயதான தோற்றத்தில் இருந்து மீண்டு அழகைப் பெறுவதற்கு முட்டைய பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைப் பகுதியை ஒரு டீ ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் பேட்சௌலி (Patchouli) எண்ணெய்யை 2 முதல் 3 சொட்டு சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி காயும் வரை காத்திருந்து, பின்னர் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்தால் முகம் நிச்சயமாக பொலிவு பெறும்.

முகப்பொலிவு : மங்கிய மற்றும் சோர்வான முகத்துடன் இருப்பவர்கள் பொலிவு பெறுவதற்காக பல்வேறு கிரீம்களை முயற்சி செய்து பார்க்கின்றனர். ஆனால், ஒரு முட்டையை எடுத்து ஒரு டீ ஸ்பூன் வெள்ளைக் கருவுடன், அரை டீ ஸ்பூன் தேனை சேர்த்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரில் முகத்தை கழுவி பார்த்தால், உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.

முகத்தில் உள்ள துளைகள் : ஒரு சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே துளைகள் இருக்கும். அவை கருப்பாகவும் மாறி தோற்றத்தை முழுமையாக கெடுத்துவிடும். ஆனால், ஒரு டீ ஸ்பூன் வெள்ளைக் கருவுடன், ஒரு டீ ஸ்பூன் சர்க்கரை மற்றும் சோளமாவை சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். வழக்கமாக செய்து வந்தால் முகத்தில் இருக்கும் துளைகள் காணாமல் போகும்.

எண்ணெய் வடிந்த முகம் : பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை எண்ணெய் வடிந்த முகம். இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், ஒரு டீ ஸ்பூன் முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன், அரை டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி மற்றும் ஒரு டீ ஸ்பூன் தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலக்கி முகம் முழுவதும் தடவிக் கொண்டு, காயும் வரை காத்திருங்கள்த. பிறகு தண்ணீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் இருக்காது.

பளபளப்பான முடி : உங்கள் முடியை பளபளப்பாக மாற்ற வேண்டும் என நீங்கள் நினைத்தால், முட்டையில் செய்ய முடியும். 2 முட்டையுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பாலை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். அதனை உங்கள் முடியின் மீது அப்ளை செய்து பிறகு சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் முடி விரைவில் பளபளப்பாக மாறும்.

கண் புருவம் : Eye bags எனப்படும் கண் புருவத்துக்கு கீழாக இருக்கும் பகுதி பளபளப்பாக மாற்ற வேண்டும் என்றால், முட்டையின் வெள்ளைக் கரு பகுதியை எடுத்து அதன் மீது அப்ளை செய்ய வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் நன்றாக தேய்த்துவிடுங்கள். உங்களின் Eye bags பளபளப்பாக ஜொலிக்கும்.

பலவீனமான முடி : முடி பலவீனமாக இருந்தால், அவற்றை முற்றிலுமாக அகற்றவது முட்டையை பயன்படுத்தலாம். முட்டையுடன், ஆலிவ் ஆயிலை சேர்த்து அந்த கலவையை தலையில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு, நன்றாக மசாஜ் செய்தால் பலவீனமான முடி தலையில் இருந்து கீழே விழுந்துவிடும்.

Related Articles

Close