ஆரோக்கியம்புதியவை

பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்ட ஆலிவ் ஆயில் !!

நாம் உண்ணும் உணவுகளில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி வருவதால் இரு பாலருக்கும் பாலியல் ரீதியான குறைபாடுகள் சுலபத்தில் நீங்கும்.
ஆலிவ் எண்ணெய் கொண்டு சமைக்கப்பட்ட பதார்த்தங்களை சாப்பிட்டு வருவதால் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைக்க முடியும்.
உணவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆசுவாசபடுத்தி நமது மன அழுத்தங்கள் முற்றிலும் நீங்குகிறது.
தினமும் காலையில் தூங்கியெழுந்ததும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் அருந்த வேண்டும் மற்றும் இரவில் உறங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அருந்த வேண்டும். இந்த முறையை மலச்சிக்கல் தீரும் வரை பயன்படுத்த வேண்டும்.
சுடுநீரில் எலுமிச்சம் சாற்றை பிழிந்து,கலக்கி அந்நீரில் சிறிது பாதத்தை வைத்திருந்து பிறகு பாதவெடிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆலிவ் எண்ணையை தடவி வந்தால் பாத வெடிப்பு கூடிய சீக்கிரம் குணமாகும்.
ஈரப்பதம் குறைவதாலும் சில வகையான நுண்ணுயிர்கள் தொற்றுகளாலும் சிலருக்கு தோலில் அரிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. தோல் பளபளப்பை மேம்படுத்தி இளமை தோற்றத்தை பாதுகாக்கிறது.

Related Articles

Close