குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி
உருளைக்கிழங்கைக் கொண்டு பலவாறு குழம்புகள் செய்யலாம். அந்த வகையில் குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி சற்று வித்தியாசமாக இனிப்பு, காரம் மற்றும் புளிப்பு போன்ற சுவைகள் கலந்து இருக்கும்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 500 கிராம் (சிறியது மற்றும் நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும்.
சர்க்கரையானது கரைந்து, பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
பின்பு அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளற வேண்டும்.
பின் உருளைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, தயிர் சேர்த்து மீண்டு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது சுவையான குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி!!!