ஆரோக்கியம்

தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.

ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம். அவற்றை பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி அகற்ற பல தீர்வுகள் உள்ளன. அவை பற்றிய தொகுப்பு..

தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும். சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு  மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.

பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றி விட்டு ரோஸ்வாட்டர் விட்டு அரைத்து தழும்புகளின் மீது தடவி வரலாம்

எலுமிச்சை சாற்றில் பஞ்சை நன்றாக ஊறவைத்து மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். தோலில் மேற்பரப்பில் சாறு நன்றாக படியும் வகையில் சிறிது நேரம் உலர வைத்து விட்டு பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறைய செய்வதுடன் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கவும் உதவும்.

தீக்காயம் நன்றாக ஆறிய பிறகு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். எலுமிசை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும் தினமும் இருமுறை தடவி மசாஜ் செய்து வரலாம். அதனால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து காயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் மீது தேய்த்து குளித்து வரலாம். நாளடைவில் தழும்புகள் மறையும்.

தக்காளியை தோல் உரித்து மிக்சியில் இட்டு அரைத்து எடுத்து தினமும் இரவு நேரத்தில் பிரசவ தழும்புகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும். காலையில் குளிர்ந்த நீரில் கழுவ விடலாம். மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

சோற்று கற்றாழையின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து அறுவை சிகிச்சை தழும்புக்கு மேல் நன்றாக தடவவும். தினமும் இரவில் தடவி காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் தழும்பு மறைந்து விடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker