வீட்டை சுத்தம் செய்யும்போது உஷார்..! வினிகரை இந்த பொருட்கள் மீது பயன்படுத்தினால் வீணாகிவிடும்
கடுமையான இரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையாகவே உங்கள் வீடு மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தம் செய்ய வினிகர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வினிகரைப் பயன்படுத்துவதில் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் தாக்கம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? வினிகரை எவற்றிலெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
1. மர பொருட்கள் : மர பொருட்கள் மற்றும் மர தளங்களை எப்போதும் சோப்பு மற்றும் நீர் கரைசல் கொண்டு தான் சுத்தம் செய்ய வேண்டும். வினிகரை மர பொருட்களில் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். வினிகரில் உள்ள அமிலம் அதன் மெழுகு மற்றும் மேற்பரப்பை அரித்து மங்கலான தோற்றத்தை தரும் என்பதால் கவனம் தேவை.
2. சமையலறை : வினிகரில் உள்ள அமிலம் கிரானைட் அல்லது பளிங்கு போன்ற இயற்கை கற்களை சேதப்படுத்தம். எனவே உங்கள் சமையலறையில் இத்தகைய கற்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், அதில் வினிகர் பயன்படுத்தி சுத்தம் செய்வதை தவிர்த்து விடுங்கள். தவறுதலாக நீங்கள் பயன்படுத்த நேர்ந்தால் அது கற்களின் மேற்பரப்பில் சிறிய துளைகளை உருவாக்கி, அதன் பிரகாசத்தை இழக்க செய்யும்.
3. குளியலறை : பொதுவாக குளியலறையை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். வினிகர், எலுமிச்சை போன்றவ கிளீனர்கள் குளியறையில் பயன்படுத்தினால் கற்கள் சேதமடையும். கற்களை சுத்தம் செய்வதற்கென தயாரிக்கப்பட்ட சிறப்பு கிளீனர்களை பயன்படுத்துவது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்.
4. முட்டை : நீங்கள் ஒரு முட்டையை தரையில் கொட்ட நேர்ந்தால், அதை வினிகர் கொண்டு சுத்தம் செய்ய முயற்சிக்காதீர்கள், ஏனெனில் வினிகர் முட்டை கடினமாக உறைவதற்கு காரணமாகிறது, மேலும் அதை சுத்தம் செய்வது இன்னும் கடினமாகும் என்பதால் வினிகரை தவிர்ப்பது நல்லது.
5. இரும்பு : சிலர் வினிகரைப் பயன்படுத்தி இரும்பு மற்றும் இரும்பு சாமான்களை சுத்தம் செய்ய அறிவுறுத்துகிறார்கள். ஆனால் வினிகர் இரும்பின் உள் பகுதிகளை சேதப்படுத்தும். ஒரு இரும்பை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழி எண்ணெய் கொண்டு சுத்தம் செய்வதியாகும். நீரை கொண்டு சுத்தம் செய்தால் விரைவில் துரு பிடித்துவிடும் என்பதால், ஒரு சுத்தமான துணியை கொண்டு நன்கு துடைத்து, அதன் பின்னர் அந்த துணியில் எண்ணெய் தொட்டு சுத்தம் செய்யலாம்.
6. வாஷிங் மெஷின் : வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வினிகரைப் பயன்படுத்துவது பொதுவான ஆலோசனையாகும். இது இயந்திரத்தின் உலோக பாகங்களுக்கு ஒரு பிரகாசத்தை கொடுக்கும், ஆனால் இயந்திரத்தின் ரப்பர் பாகங்களை சேதப்படுத்தும். உங்கள் வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய விரும்பினால், ஒரு துணியை கொண்டு சுத்தம் செய்தாலே போதுமானது.
7. கத்திகள் : மிகவும் நல்ல தரமான கத்தி-கத்திகள் கார்பன் எஃகு மூலம் தயாரிக்கப்படுகின்றன, இவரை வினிகர் கொண்டு சுத்தம் செய்தால் அதிலிருக்கும், அமிலங்கள் கத்தியை சேதப்படுத்தும். எனவே கத்திகளை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழி சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவதாகும். கத்தியில் துரு உருவாவதைத் தடுக்க நீங்கள் அவற்றை எண்ணெய் பயன்படுத்தி கூட சுத்தம் செய்யலாம்.