உலக நடப்புகள்புதியவை

முகத்தில் உள்ள 9 செல்வ புள்ளிகளும்.. அவற்றிற்கான அர்த்தங்களும்….

உங்கள் முகம் உங்களைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லும் என்பது தெரியுமா? மூக்கின் வடிவம், கண்களின் நிறம் மற்றும் உதடுகள் கூட ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி சொல்லும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் உங்கள் முகத்தை வைத்து உங்களின் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கணிப்புகள் அனைத்துமே முகத்தில் இருக்கும் 9 செல்வ இடங்களை வைத்து சொல்கிறது.

ஒருவர் அதிர்ஷ்சாலி அல்லது துரதிர்ஷ்டசாலியாக இருந்தால், அதை முகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் வெளிக்காட்டும் என சீனர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். முகத்தின் ‘மலைகள்’ மற்றும் ‘ஆறுகள்’ அந்த நபரின் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் பிரதிநிதித்துவதில் பங்களிக்கின்றன. முகத்தில் உள்ள செல்வ புள்ளிகள் சீன முக வாசிப்பின் (Chinese Face Reading) ஒரு பகுதியாகும். சீன ஜோதிடத்தின் படி, ஒருவரின் ஆளுமை, அதிர்ஷ்டம், தலைவிதி மற்றும் செல்வத்தை அளவிடுவதற்கான சிறந்த ஒரு கருவியாக சீனர்கள் இதை நம்புகின்றனர். இப்போது முகத்தில் உள்ள அந்த ஒன்பது செல்வ புள்ளிகள் எவையென்பதைக் காண்போம்.

முதல் செல்வ புள்ளி

முதல் செல்வ புள்ளி

நெற்றியில் அமைந்துள்ள இந்த இடம் சொர்க்கத்தில் இருந்து வரும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரின் நெற்றி சமச்சீராக இருக்கும். ஒருவேளை ஒருவரது நெற்றி நீளமாக இருந்தால், அவர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே தான் நெற்றிப் பகுதியில் பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. வட்ட வடிவிலான நெற்றி எதிர்காலத்தின் சக்தியைக் குறிக்கிறது. வளைந்த நெற்றி செல்வத்தைக் குறிக்கிறது மற்றும் நீளமான நீட்டிய நெற்றி அதிகாரத்தைக் குறிக்கிறது.

இரண்டாவது செல்வ புள்ளி

இரண்டாவது செல்வ புள்ளி

சீனர்களின் கூற்றுப்படி, சொர்க்கம், பூமி மற்றும் மனிதகுலம் ஆகியவை அதிர்ஷ்டத்தின் மூன்று காரணிகளாகும். அதில் மனிதகுலம் கண்களுக்கு இடையே மையத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தோல் பிரச்சனை ஏதுமின்றி இருந்தால், அவர்கள் நல்ல அதிர்ஷ்டசாலி, செல்வாக்குமிக்கவர்களாவர் என்று பொருள். ஒருவேளை இந்த பகுதியில் மச்சம் அல்லது முடி இருந்தால், அது வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய இடையூறுகளைக் குறிக்கிறது.

மூன்றாவது செல்வ புள்ளி

மூன்றாவது செல்வ புள்ளி

ஒருவரது செல்வத்தைப் பற்றி கூறும் போது, அவரது மூக்கின் அளவு முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த இடம் “யின்” ஐ குறிக்கிறது மற்றும் இது முகத்தில் உள்ள ஆறுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வட்டமான அல்லது சதைப்பற்றுள்ள மற்றும் மென்மையான மூக்கு செல்வந்தர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்று கணிப்படுகிறது. இந்த மாதிரியான மூக்கைக் கொண்ட பெண்ணை திருமணம் செய்யும் ஆண் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார். இருப்பினும், கண்களுக்கு இடையே உள்ள இடத்தைப் போல, மூக்கில் புள்ளிகள் இருந்தால், அது உங்கள் வாழ்வில் தடைகள் அதிகம் இருக்கும் என்று அர்த்தம்.

நான்காவது செல்வ புள்ளி

நான்காவது செல்வ புள்ளி

மூக்கிற்கு கீழ் மற்றும் உதட்டிற்கு மேல் உள்ள வளைவுகளைக் குறிப்பது தான் நான்காவது செல்வ புள்ளி. இந்த அம்சம் உயர் வர்க்க வாழ்க்கை மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது. ஒருவருக்கு இந்த பகுதி பிளவுகள் அல்லது சற்று குழியாக இருந்தால், அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி மற்றும் மிகவும் கவர்ச்சிகரமானவர்.

ஐந்தாவது செல்வ புள்ளி

ஐந்தாவது செல்வ புள்ளி

இந்த செல்வ புள்ளி வாயைக் குறிக்கிறது மற்றும் இது தான் முகத்தின் இரண்டாவது நதியாக கருதப்படுகிறது. ஆற்றின் ஈரப்பதத்தைப் போல, மென்மையான மற்றும் சதைப்பற்றுடன் இருந்தால், அது நல்ல வாழ்க்கையைக் குறிக்கிறது. ஒருவரது எவ்வளவு பெரியதாக அல்லது சிறியதாக இருந்தாலும், வறண்டு இருந்தால், நதியில் நீர் பற்றாக்குறையைக் குறிக்கிறது. அதாவது அதிர்ஷ்டத்தின் பற்றாக்குறையைக் குறிக்கிறது. எனவே உதட்டில் நல்ல ஈரப்பதம் இருக்கும் வரை, நல்ல அதிர்ஷ்டம் தொடர்ந்து கொட்டும்.

ஆறாவது செல்வ புள்ளி

ஆறாவது செல்வ புள்ளி

முகத்தின் இரண்டாவது மலை தான் தாடை. இது பூமியைக் குறிக்கிறது. ஒருவரது தாடை நீண்டு, வலுவாக இருந்தால், அது அவரது செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சியால் நிறைந்த நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. ஒருவரது தாடை நன்கு பருத்து காணப்பட்டால், அது நிறைய சொத்து செல்வங்களைக் குவிக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. அதுவே தாடை பின்வாங்கி இருந்தால், அது முதுமையில் சந்திக்கும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது. அதோடு இது அகால மரணத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஏழாவது செல்வ புள்ளி

ஏழாவது செல்வ புள்ளி

ஒருவரது கண்கள் ஏழாவது செல்வ புள்ளிகளாகும். இதில் கண்களின் வடிவம், அளவு மற்றும் வண்ணம் ஒரு பொருட்டல்ல. அதற்கு பதிலாக ஒருவரது கண்கள் பிரகாசமாகவும், சற்று ஈரப்பசையுடனும் இருப்பது, உயிர் சக்தியைக் குறிக்கிறது. அதாவது நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. மேலும் ஒருவரது புருவங்கள் நன்கு வளைந்து இருந்தால், அது ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தைக் காட்டுகிறது. இருப்பினும், ஒருவரது புருவங்கள் மெல்லியதாக இருந்தால், அது அவர்கள் வாழ்வில் வெற்றி அடைவது மிகவும் கடினம் என்று பொருள்.

எட்டாவது செல்வ புள்ளி

எட்டாவது செல்வ புள்ளி

இந்த எட்டாவது செல்வ புள்ளி 21 வயதை அடைந்தவுடன் மட்டுமே அதிர்ஷ்டமிக்கதாக கருதப்படுகிறது. ஏனெனில் சீனர்கள் ஒருவர் முதிர்ச்சி அடைய கருதும் வயது இது தான். வட்டமான மேல் கன்னங்கள், உங்கள் வாழ்க்கையில் நுழையக்கூடிய தீவிரமான செல்வத்தைக் குறிக்கின்றன. அதே சமயம் கன்னங்கள் சதைப்பற்றுடன், இளஞ்சிவப்பு நிறத்துடன் பிரகாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது மோசமான உடல்நலம் மற்றும் உயிர்சக்தியைக் குறிக்கும்.

ஒன்பதாவது செல்வ புள்ளி

ஒன்பதாவது செல்வ புள்ளி

முகத்தில் உள்ள ஒன்பதாவது செல்வ புள்ளி தான் காதுகள். இது முகத்தின் மற்றொரு நதியாகும். காதுகள் நன்கு அழகாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் இருக்கும் போது, அவை உங்கள் வழியில் வரும் நல்ல அதிர்ஷ்டத்தையும், புத்திசாலித்தனத்தையும் குறிக்கின்றன. நீளமான காதுகள் அதிக சதைப்பற்றள்ளதாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இல்லாமல் இருந்தால், அது வாழ்வின் ஒரு பகுதியில் செல்வாக்குமிக்க வாழ்க்கையை வாழப்போவதைக் குறிக்கிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker