ஆரோக்கியம்புதியவைமருத்துவம்
தீராத ஒற்றைத்தலைவலியா? இதனை எப்படி எளியமுறையில் தீர்க்கலாம்?
எம்மில் பலர் தலைவலியால் பாதிக்கப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுவதுண்டு.
அதன்போது பெரும்பாலானவர்கள் உடனடி நிவாரணத்தை விரும்பி, சாதாரண தலைவலிக்கான வலி நிவாரணிகளை பயன்படுத்துகிறார்கள். இது ஆபத்தான பின் விளைவை ஏற்படுத்தும்.
இதனை எளியமுறையில் தீர்க்க ஒரு சில இயற்கை வைத்தியங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
- நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.
- முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
- அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
- 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.இது நல்ல நிவாரணம் தரக்கூடியதாகும்.
- நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
- துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.
- கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.
- வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
- முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
- கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்.