ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பூச்சி கடித்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? அதற்கான வீட்டு வைத்தியங்கள் இதோ…

நம்மளை கொசுக்கள், தேனீ குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள் கடித்தால் கூட நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்கள் பிறகு உங்களுக்கு சரும அழற்சியை உண்டாக்கும். எனவே இந்த மாதிரியான பூச்சிக் கடிக்கு ஆரம்ப வைத்தியமாக சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. இது உங்களின் அழற்சியை போக்கவும் வேதனையை குறைக்கவும் உதவுகிறது.

பொதுவாக சின்னச் சின்ன பூச்சிக் கடியைக் கூட நாம் அசால்ட்டாக விட்டு விடுவோம். ஆனால் அதுவே பின்னாளில் நமக்கு எரிச்சல், சரும அழற்சி போன்றவற்றை தோற்றுவிக்கக் கூடும். சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். எனவே பூச்சிக் கடியை நீங்கள் அசால்ட்டாக விடுவது சரியானது கிடையாது. கொசுக்கடி, தேனீ, குளவிகள் அல்லது சிலந்திகள் போன்றவை நாம் வாழும் இடங்களைச் சுற்றி நிறையவே காணப்படுகிறது. எனவே இந்த பூச்சிகள் நம்மை அதிகமாக தாக்க வாய்ப்பு உள்ளது. இந்த பூச்சிகள் மழைக்காலத்திலும் வெயில் காலத்திலும் அதிகமாக பரவக் கூடியது. எனவே ஒரு வேளை உங்களை பூச்சிகள் கடித்து விட்டால் உடனே விஷம் ஏறாமல் எப்படி சரி செய்ய வேண்டும். வாங்க தெரிஞ்சுக்கலாம். அதற்கான வீட்டு வைத்திய முறைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறையவே காணப்படுகிறது. இது உங்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது. சிறிது இலவங்கப்பட்டையை நசுக்கி தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி ஒரு மணி நேரம் வரை வையுங்கள். இலவங்கப்பட்டை ஒரு வேளை பூச்சிக்கடியால் ஏற்படும் அழற்சியை குறைத்து விடும்.

​ஐஸ் பேக் ஒத்தடம்

பூச்சிக்கடி ஏற்பட்ட உடன் அந்த இடத்தில் 20 நிமிடங்கள் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அது அந்தப் பகுதியை உணர்வு இல்லாமல் ஆக்கி வீக்கத்தை குறைக்க பயன்படுகிறது.

​பப்பாளி

பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் பூச்சிக்கடியால் ஏற்படும் விஷத்தை முறியடிக்க உதவுகிறது. உடனடி நிவாரணத்திற்காக பூச்சியின் கொடுக்கு உள்ள இடத்தில் இந்த பழத் துண்டுகளை வெட்டி நிவாரணத்திற்கு வையுங்கள்.

​வெங்காயம்

இந்த காய்கறிகளில் என்சைம் அதிகளவு காணப்படுகிறது. இது அழற்சியை ஏற்படுத்தும் சேர்மங்களை உடைக்க உதவுகிறது. ஒரு வெங்காயத்தை வெட்டி அதை கொடுக்கு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும், அரிப்பு குறையும் வரை தேயுங்கள்.

​துளசி இலைகள்

சில துளசி இலைகளை எடுத்து நசுக்கி அதை காயத்தின் மீது வையுங்கள். கற்பூரம் மற்றும் தைமோல் போன்றவை அரிப்பு நீங்க உதவுகிறது.

​புதினா

புதினா உங்களுக்கு குளிர்ந்த தன்மையை அளிக்கக் கூடியது. இது அரிப்புகளை குறைப்பதன் மூலம் நிவாரணம் அளிக்க உதவுகிறது. துளசி இலைகளை எடுத்து நசுக்கி அதை பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வை தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து எண்ணெய்யை தடவுங்கள். நன்மை கிடைக்கும்.

​தேநீர் பேக்குகள்

டீ பேக்குகளில் உள்ள தேயிலை குளிர்ச்சியான தன்மையை போக்க உதவுகிறது. தேயிலையில் உள்ள டானின்கள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. எனவே பூச்சிக் கடிக்கு டீ பேக் சிறந்தது.

​டூத்பேஸ்ட்

சில காட்டன் பஞ்சை எடுத்து அதில் டூத்பேஸ்ட்டை வைத்து பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வையுங்கள். டூத்பேஸ்ட்டில் மெந்தால் மற்றும் பேக்கிங் சோடா போன்றவை உள்ளது. இது பூச்சிக்கடிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.

​கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் ஆன்டி செப்டிக் தன்மை காணப்படுகிறது. இதுவும் பூச்சிக் கடிக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்க உதவுகிறது. கற்றாழை ஜெல்லை காயம் ஏற்பட்ட இடத்தில் வையுங்கள். அது உங்க பூச்சிக் கடியால் ஏற்படும் வேதனையை முடிந்த அளவு குறைக்கும்.

​ஆல்கஹால்

பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் ஆல்கஹால் அல்லது மவுத்வாஷை அப்ளே செய்யுங்கள். ஆல்கஹால் அரிப்பை குறைக்க உதவுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker