அழகு..அழகு..புதியவை

உடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க!

உடலுக்கு சோப்புக்கு பதிலாக பாடி வாஷ் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. ஆண்களும் சோப்புக்கு மாற்றாக பாடி வாஷ் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்கள் என்று எல்லோருமே சோப்புக்கு மாற்றாக பாடி வாஷ் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். அவ்வபோது பாடி வாஷ் தயாரிப்புகளை மாற்றும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கவும் வாய்ப்புண்டு.

இயற்கை அழகு பராமரிப்பு போன்று நீங்கள் இயற்கையான பொருள்களை கொண்டும் பாடி வாஷ் தயாரிக்க செய்யலாம். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய முக்கியமான பொருள் குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். . அதை கொண்டு எப்படி பாடி வாஷ் ரெசிபி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

​பாடி வாஷ் ரெசிபி – 1

காஸ்டில் சோப் திரவம்- அரை கப் ( காஸ்டில் சோப் என்பது விலங்குகளின் கொழுப்புகள் மற்றும் செயற்கை பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது)

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

கிளிசரின் -2 டீஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்

வைட்டமின் ஈ ஆயில் – 1 டீஸ்பூன்

சிட்ரஸ் எண்ணெய் (எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை ) – 20 சொட்டுகள்.

அகலமான பாத்திரத்தில் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இவை எல்லாம் சேர்ந்ததும் கலவையை பாடி வாஷ் செய்வதற்கான பிரத்யேகமான பாட்டிலில் வைக்கவும். இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். எனினும் நீங்கள் வீட்டிலேயே தயாரிப்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்துங்கள்.

​பாடி வாஷ் ரெசிபி -2

தேங்காய்ப்பால் – அரை கப்

காஸ்டில் சோப் திரவம் -முக்கால் கப்

ஜோஜாபா எண்ணெய் -3 டீஸ்பூன்

கிளிசரின் – 2 டீஸ்பூன்

தேன் -1 டீஸ்பூன்

டீ ட்ரீ ஆயில் – 5 சொட்டுகள்

முதலில் தேங்காய்ப்பாலை ஒரு பாட்டிலில் ஊற்றவும். பிறகு வாசனை இல்லாத சோப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தேன், கிளிசரின், ஜோஜாபா என்ணெய் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து விடவும். இதை நன்றாக குலுக்கி பாட்டிலில் வைக்கவும்.

இது ஜோஜாபா மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் மெழுகு என்பதால் ஒரு வருடம் வரை இந்த பாடி வாஷ் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

​பாடி வாஷ் ரெசிபி -3

காஸ்டில் சோப்பு திரவம் – 2 கப்

கிளிசரின் – 5 டீஸ்பூன்

பெப்பர்மிண்ட் எண்ணெய்- 10 சொட்டுகள்

அத்தியாவசிய எண்ணெய்- 10 சொட்டுகள்

முதலில் பாட்டிலில் காஸ்டில் சோப்பை ஊற்றி பிறகு கிளிசரின் சேர்த்து நன்றாக குலுக்கவு. அதன் பிறகு அத்தியாவசிய எண்ணெயகளை சேர்த்து நன்றாக குலுக்கி எடுக்கவும்.

இந்த பாடி வாஷ் ரெசிபியும் ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

​காஸ்டில் சோப்பு திரவம் – அரை கப்

தேன் – அரை கப்

விளக்கெண்ணெய் – 2 தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் -2 டீஸ்பூன்

அத்தியாவசிய எண்ணெய் – 10 சொட்டுகள்

முதலில் காஸ்டில் சோப்பு திரவத்தை பாட்டிலில் ஊற்றி தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு விளக்கெண்ணெய் அதை தொடர்ந்து ஆலிவ் எண்ணெய்களையும் சேர்க்கவும். இதை பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாக குலுக்கவும்.

விளக்கெண்ணெய் அதிக அடர்த்தி கொண்டது என்பதா ல் நன்றாக குலுக்கி பயன்படுத்த வேண்டும். இந்த பாடி வாஷ் ரெசிபி – 2 வருடங்கள் வரை நீடிக்கும் என்றாலும் நீங்கள் 1 வருடத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

​பாடி வாஷ் ரெசிபி -5

காஸ்டில் சோப்பு திரவம் – முக்கால் கப்

தேன் – முக்கால் கப்

ஆலிவ் எண்ணெய் – முக்கால் கப்

அத்தியாவசிய எண்ணெய் – 30 முதல் 60 சொட்டுகள் வரை ( உங்களுக்கு பிடித்த ஃப்ளேவர்களை பயன்படுத்துங்கள்)

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து பாட்டிலில் ஊற்றி நன்றாக குலுக்கி எடுக்கவும். அத்தியாவசிய எண்ணெயை மட்டும் இறுதியாக விட்டு குலுக்குங்கள். இப்போது இது தயாராக உள்ளது. இந்த பாடி வாஷ் ஒரு வருடம் வரை தாங்க கூடியது.

​பாடி வாஷ் ரெசிபி – 6

சுத்தமான நீர் – 6 கப்

சோப்பு கட்டிகள் – 3

இரும்பு பாத்திரத்தில் நீர் கொதிக்க வைத்து சோப்பு கட்டிகளை அதில் சேர்த்து 30 விநாடிகள் அல்லது அவை உருகும் வரை வைத்திருங்கள். சோப்பு கட்டியில்லாமல் இருக்கவேண்டும்.

அதனால் கிளறீகொண்டே இருங்கள். பிறகு சோப்பின் அனைத்து பகுதியும் உருகியபிறகு இதை இறக்கி கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றீ பயன்படுத்துங்கள். பிறகு இவை அடர்த்தியாக செய்யும். பிறகு தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து பயன்படுத்துங்கள். ஆறுமாதங்களுக்குள் இதை பயன்படுத்தி விடுங்கள்.

​பாடி வாஷ் ரெசிபி – 7

உங்கள் சருமம் வறண்டு இருந்தால் உங்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும்.

காஸ்டில் சோப்பு திரவம் – 2 கப்

பாதாம் எண்ணெய் – 3 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 1 கப்

அத்தியாவசிய எண்ணெய் – 20 சொட்டுகள்

அனைத்தையும் பாட்டிலில் ஊற்றி நன்றாக கலக்கி எடுக்கவும். பாட்டிலில் சேர்த்து குலுக்கி விடவும். குறைவான அளவு மட்டுமே பயன்படுத்துங்கள். ஏனெனில் பன்னீர் நீண்ட நாட்கள் வரை தாங்காது. அதனால் இந்த் அரெசிபியை இரண்டு வாரங்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள். பன்னீர் சேர்க்காமல் என்றால் நீங்கள் ஆறுமாதங்கள் வரை இதை பயன்படுத்தலாம்.

​பாடி வாஷ் ரெசிபி – 8

உங்கள் சருமம் எண்ணெய்பசையை கொண்டிருந்தால் இந்த ரெசிபி உதவியாக இருக்கும்.

நீர் – 5 கப்

காஸ்டில் சோப்பு திரவம் – அரை கப்

வேப்பிலை சாறு – 2 டீஸ்பூன் வேப்பிலை இலை கொதிக்க வைத்த நீர் அல்லது வேப்பிலையை மசித்து கொதிக்க வைத்து வடிகட்டிய நீர்

தேங்காய் எண்ணேய் – அரை கப்

களிமண் – 1 டீஸ்பூன்

அத்தியாவசிய எண்ணெய் – 15 சொட்டுகள்

எல்லா பொருள்களையும் சேர்த்து ஒன்றாக கலந்து பாட்டிலில் சேர்த்து நன்றாக குலுக்கி எடுக்கவும். இதை ஒவ்வொரு முறையும் குலுக்கிய பிறகு பயன்படுத்துங்கள். இந்த பாடி வாஷ் ரெசிபி 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை பயன்படுத்தலாம்.

எல்லா ரெசிபிக்களின் தயாரிப்பும் எளிதானது தான். ஆனால் சரியான அளவில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker