ஆரோக்கியம்புதியவை

உங்கள் பற்களை வலுவானதாக மாற்ற வேண்டுமா ? இத மட்டும் செய்து பாருங்க..

“பல் போனால் சொல் போகும்” இந்தப் பழமொழியின் பொருள் அனைவருக்கும் தெரியும். பற்களைப் பேணிக்காப்பதில் மிகுந்த அக்கறையை நம்மில் பலர் கொடுப்பதில்லை. தினமும் வேகவேகமாக பல்லை துலக்கி விட்டு காபியோ, டீயோ குடிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. பொதுவாகப் பற்கள் நாம் உண்ணும் உணவை நன்றாக அரைத்து எளிதில் செரிமானமடையச் செய்ய உதவும். ஆனால் பற்களை ஒழுங்காக பாதுகாக்காவிட்டால் பல்லில் சிறிய துகள்கள் சிக்கிக்கொண்டு வருங்காலத்தில் அவை நமக்கு பல்வலி, ஈறு பிரச்சனை, சொத்தைப்பல், மஞ்சள் பல், வாய் துர்நாற்றம் என பல சிக்கல்களை கொண்டுவரும். இவற்றை போக்க நாம் டாக்டரை பார்ப்பதோடு பின்வரும் வீட்டு வைத்தியத்தை பின்பற்றினால் போதும்.,

கால்சியம் & வைட்டமின் D சப்ளிமெண்ட்ஸ்:

பற்களின் உருவாக்கத்தில், கால்சியம் மற்றும் வைட்டமின் D குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவை நீங்கள் சரிவர கொடுக்கவில்லை என்றால், பின்னாளில் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகளில் சிக்கல் ஏற்பட தொடங்கும். பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசித்தபின், உங்கள் அன்றாட உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் D சப்ளிமெண்ட்ஸை சேர்க்கவும். இது உங்கள் பல்லை ஆரோக்கியமாக்கும்.

நெல்லிக்காய் பொடி:இரும்பு சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காயை, ஏழைகளின் ஆப்பிள் என அழைப்பர். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வை தரவல்லது நெல்லிக்கனி. நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது. அக உடலை மட்டுமல்ல, கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நெல்லிக்காயை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் பற்களில் இருக்கும் ஓட்டிகள் அடைந்து அவை ஒன்றாக இணையும். மேலும் இது பற்களை இறுக்கமாக்கும்.

ஒரு சிறிய பவுலில், 1 தேக்கரண்டி அம்லா/நெல்லி தூளுடன் 2 தேக்கரண்டி தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்டை உங்கள் கைவிரலில் சிறிது எடுத்து அதனுடன் பற்களில் மசாஜ் செய்யவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதைப் பயன்படுத்தவும்.

கடுகு எண்ணெய் & தேன்:

தேன் மற்றும் கடுகு எண்ணெய் உங்கள் வாயில் துர்நாற்றம், மற்றும் பாக்டீரியாவை அகற்ற உதவும். அவை பாக்டீரியாவை எதிர்த்து போராடுவதால் உங்கள் பல் ஆரோக்கியமாக இருக்கும். பற்சிதைவிற்கு பாக்டீரியாதான் முக்கிய காரணம். கடுகு எண்ணெயும் தேனும் பொதுவான பல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதைத் தவிர, ஈறுகளையும் பலப்படுத்தி தளர்வான பற்களை இறுக்குகிறது.

ஒரு சிறிய பவுலில், 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் தேனை சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலந்து பற்கள் மீது மெதுவாக மசாஜ் செய்யவும். பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்ய உங்கள் விரல் அல்லது மென்மையான பிரஷை பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். ஒவ்வொரு உணவிற்கும் பிறகு இவ்வாறு செய்து வந்தால் விரைவில் பல் இடைவெளி குறைந்து வலுவாகும்.

பூண்டு:

நம் உணவில் அற்புதமான சுவைகளைச் சேர்க்க பெரும்பாலான வீடுகளில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதம் என்றால் அது பூண்டு. பூண்டு நமது உடல் மற்றும் பல் ஆரோக்கியத்திற்கான சிறந்தவற்றை கொண்டுள்ளது. இது ஒரு வலுவான ஆண்டிமைக்ரோபையல் ஏஜென்டை கொண்டுள்ளது, எனவே உங்களுக்கு தளர்வான பற்கள் இருந்தால் பூண்டை தவறாமல் சாப்பிடுவது முக்கியம். உங்களுக்கு ஏதேனும் பாக்டீரியா தாக்குதல் இருந்தால், பூண்டு அதை எதிர்த்துப் போராடும், மேலும் காலப்போக்கில் அந்த தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அடியோடு அழிக்கும் வல்லமை பூண்டிற்கு உண்டு.

முதலில் பூண்டை எடுத்து, தோலுரித்து, இரண்டு பகுதிகளாக வெட்டவும்.

வாயில் பற்களுக்கிடையில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில், ஒரு துண்டு பூண்டை வைக்கவும். பூண்டிலிருந்து வெளிவரும் சாறுகள் பல் முழுதும் பரவட்டும். இந்த வீட்டு வைத்தியத்தை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மஞ்சள் மற்றும் மிளகு:

கிருமிநாசினியாக செயல்படும் மஞ்சள் தூள் பல் சொத்தையிலிருந்தும் உங்கள் பல்லை தளர்வாக்கமாலும் பாதுகாக்கும். மேலும் இந்த மஞ்சள் மற்றும் மிளகு கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது. தாங்க முடியாத பல் வலி இருக்கும் போது மஞ்சள் தூளுடன் கல் உப்பை சேர்த்து நொறுக்கி சொத்தை பல் இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். வேகமாக தேய்க்காமல் மெதுவாக மசாஜ் போன்று செய்துவந்தால் வலி உடனடியாக தணியும். வலி குறைந்து உப்பு உணர்வு தெரியும் போது மிதமான சூட்டில் வாயை கொப்புளித்து வந்தால் வலி சட்டென்று குறைவதை உணரலாம்.

இதற்கு மிளகு பவுடரை ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் மிளகு தூளை சேர்க்கவும். பின்னர் அதில் 1 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடர்த்தியான பேஸ்ட்டாக தயாரிக்கவும். பேஸ்டை உங்கள் ஈறுகளில் சுமார் இரண்டு நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்யவும். இதை தினமும் செய்யுங்கள், ஆனால் இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்தி அடுத்த 30 நிமிடங்களுக்கு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம்.

உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் தான் காரணம். மோசமான பராமரிப்பும் மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும். எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்போது மட்டுமல்லாமல் எப்போதும் மேற்சொன்ன டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால் உங்கள் பல் வலுவாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker