ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

குதிகால் வலி சரிசெய்யக்கூடிய வைத்திய முறைகள் !!

காலை அடுத்த அடி எடுத்து வைக்க முடியல என்று சொல்லுவார்கள். பலருக்கும் முதலில் கணுக்காலில் படரும் வலி படிப்படியாக மூட்டு வரை பரவி தீரா நோயாக மாறிவிடுகிறது.

அதிகமான உடல் எடை இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்தமருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர் கோர்வையுடன் தொடர்பு கொண்டது என்கிறது.

உடலில் சமநிலையில் இருக்கவேண்டிய வாதம், பித்தம், கபம் மூன்றில் ஒன்று அதிகம் ஆனாலும் அவை தலையில் நீர்கோர்வை பிரச்சனையை உண்டு செய்கிறது. பிறகு தலையிலிருந்து கழுத்து பகுதியாக வெளியேறி கணுக்காலை அடைந்து அங்கு தேங்கி வலியை உண்டாக்கிவிடுகிறது. இவை பித்தநீராக கெட்டியாகி வலியை கூடுதலாக்குகிறது.

ஆரம்பத்தில் காலை தூங்கி எழுந்ததும் இந்த வலியை உணர்வார்கள். பிறகு நடக்கும் போது இலேசாக வலிக்க தொடங்கும் பிறகு படிப்படியாக வலி உணர்வு அதிகரிக்கும். சிலருக்கு கணுக்காலில் வீக்கமும் உண்டாகிறது. அதோடு குதிகால் வெடிப்பும் ஏற்படும்.

கால்களை தரையில் ஊன்றாமல் நடக்கும் போது நரம்புகள் சுருட்டி கொள்ளவும் தசை நார்கள் பாதிப்படையவும் செய்யும். எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை செய்யலாம். என்ன செய்தால் கணுக்கால் குதிகால் வலியும் வீக்கமும் கட்டுப்படும் என்று பார்க்கலாம்.

​சாதம் வடித்த கஞ்சியை சூடு பொறுக்க இருக்கும் போது அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் குதிகாலை ஊன்றி வைக்க வேண்டும். சூடு பொறுக்க தாங்கும் சூட்டில் இருந்தால் வலிக்கு இதமாக இருக்கும். சூடு ஆறிய பிறகு மீண்டும் சூடுபடுத்தி வைக்கலாம். தினமும் 15 நிமிடங்கள் வரை இதை செய்ய வேண்டும்.

இரவு நேரங்களில் படுப்பதற்கு முன்பு வெந்நீரை சூடு பொறுக்கும் அளவு வைத்து அதில் குதிகாலை நனைக்கலாம். இப்படி காலை மாலை இரண்டு வேளையும் காலை வெந்நீரில் நனைத்து வந்தால் கணுக்கால் வலி குறையும். குளிக்கும் போதும் மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை கணுக்கால் மீது ஊற்றி வரலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker