ஆரோக்கியம்புதியவை

பெண்ணுறுப்பு பகுதியில் உள்ள முடியை லேசர் மூலம் நீக்கினால் பிரச்சினை வருமா? என்ன கவனம் தேவை?

நமது உடலில் அந்தரங்க பாகங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள முடியை லேசர் சிகிச்சையின் மூலம் அகற்றுவதால் ஏற்படும் பாதிப்புகள், பக்க விளைவுகள், நன்மைகள், அதன் பின் உற்ற அறிவியல் உண்மைகள், இதற்கு முன் இந்த சிகிச்சை செய்வர்களின் அனுபவங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை விபரமாக அலசுகிறது இந்த கட்டுரை. பெண்களே உங்களது அந்தரங்க முடிகளை அகற்ற திட்டமிட்டு உள்ளீர்களா? தவறாது இந்த கட்டுரையை படிக்கவும்.
அந்தரங்கப் பகுதியில் இருக்கும் முடிகளை லேசர் சிகிச்சையின் மூலம் அகற்றுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று நாம் கூகுள் இணையதளத்தில் பார்க்கும்போதே, இதுபோன்ற தேடல்களை எத்தனை பேர் நிகழ்த்தியுள்ளனர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்தளவிற்கு, இந்த முயற்சியை பலர் மேற்கொண்டு உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்,

அந்தரங்கப் பகுதியில் இருக்கும் முடிகளை லேசர் சிகிச்சையின் மூலம் அகற்றும்போது பல்வேறு பாதிப்புகளை நாம் சந்தித்தாக வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சிகிச்சை தவறாக மேற்கொள்ளப்படும் போது, அது உயிருக்கே ஆபத்தாக கூட முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முடிகளை லேசார் மூலம் திட்டமிட்டுள்ளவர்கள், உடனடியாக, முன்னணி தோல் மருத்துவ நிபுணரிடம்தக்க ஆலோசனைகளை பெற்று செயல்படுவது நல்லது.

லேசர் மூலம் முடியை நீக்குவது

உடலின் பல்வேறு பாகங்களில் தேவையற்ற முடியை நீக்க, லேசர் ஹேர் ரிமூவல் சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிகழ்வு, தற்போது அனைத்து பியூட்டி பார்லர்கள், ஸ்பாக்கள் உள்ளிட்டவைகளில் மிகச்சாதாரணமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைக்கு நாம் உட்படும்போது, இதற்கான அடிப்படை விசயங்களை நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

பிரபல தோல் மருத்துவ சிகிச்சை நிபுணர் இதுகுறித்து கூறியதாவது, லேசர் சிகிச்சையின் போது, லேசர் கற்றையின் ஒளி, வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த லேசர் ஒளியானது, முடியில் உள்ள மெலானின் என்ற நிறமியால் ஈர்க்கப்படுகிறது. இந்த நிறமி உள்வாங்கிய ஒளி, வெப்ப ஆற்றலாக மாற்றம் அடைகிறது. இந்த வெப்ப ஆற்றல், மயிர்க்கால்களின் மாற்றத்தை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியை தடுக்கிறது.

​மயிர்க்கால்கள் சேதமடைதல்

இந்த மயிர்க்கால்களை சேதமுற செய்வதன் மூலம், முடி வளர்வதற்கு தேவையான பிராண வாயு கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. முடி மீண்டும் வளர்வதற்கு துணைபுரியும் ஸ்டெம் செல்களும், இந்த சிகிச்சையில் அழிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையின் போது 70 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பம் குறிப்பிட்ட பகுதிக்கு செலுத்தப்படுகிறது. முடியில் உள்ள அடர்த்தியான மெலானின் நிறமி, அதிகப்படியான லேசர் ஒளிக்கற்றைகளை உள்ளிழுத்து, அளவுக்கதிகமான வெப்பத்தை உண்டாக்குகிறது.

நிரந்தரமாக நீக்குவது

இந்த சிகிச்சைக்கு முன்னதாக, நாம் முடியை நீக்க உள்ள குறிப்பிட்ட இடத்தில் மெழுகு போன்ற எவ்வித பூச்சுகளையும் மேற்கொள்ள போவதில்லை. ஏனெனில், நாம் முடியை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றால் தான் மெழுகு போன்ற பூச்சுகளை நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால், நாம் அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள மயிர்க்கால்களையே முழுமையாக அகற்றி, அந்த இடங்களில் இனி முழுமையாக முடி வளர முடியாதபடி செய்ய இருக்கிறோம்.

லேசர் சிகிச்சையின் போது, முடி உள்ள பகுதியில் லேசர் ஒளி பாய்ச்சப்படுகிறது. முடியில் உள்ள மெலானின் நிறமி, இந்த ஒளியை ஈர்த்து, அதன் உள்ளே வரை சென்று, முடி வளர காரணமாக உள்ள மயிர்க்கால்களை சேதப்படுத்தி அழித்து விடுகிறது. இந்த முறையில் அழிக்கப்பட்ட முடிகள், மீண்டும் வளர்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.

​ஏன் அவ்வளவு ஆபத்தானது?

லேசர் மற்றும் ரேடியோ கதிரியக்க சிகிச்சைகள், நமது உடலில் கொலாஜன் அளவை அதிகரித்து அதன்மூலம், திசுக்களின் உட்புற பகுதிகளில் அதிக வெப்பத்தை கடத்தி செல்கின்றன. இத்தகைய சிகிச்சைகளை நாம் போதிய பாதுகாப்பு வழிமுறைகளோடு கையாளாவிட்டால், அது திசுக்களில் வடுக்கள் மற்றும் தீக்காயங்களை ஏற்படுத்தி விடும். இதன்காரணமாகவே, இத்தகைய சிகிச்சைகளை தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு மட்டுல்லாது இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற நிபணரிடத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். பெண்களின் பிறப்பு உறுப்பு பகுதியில் உள்ள முடியை அகற்றுவதற்கு என்றால், நாம் மேலும் கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும்.

​சரும வறட்சி

பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் லேசர் சிகிச்சையானது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளான வறட்சி, வலி மற்றும் பாலியல் பகுதிகள் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. ஆனால், இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் லேசர் சிகிச்சையானது எந்தளவிற்கு பாதுகாப்பானது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

​மாதவிடாய் சுழற்சி

பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் லேசர் சிகிச்சையானது, மாதவிலக்கு சுழற்சியுடன் தொடர்புடைய வேஜினரல் ஏற்படும் வறட்சி, உடலுறவின் போது தாங்கமுடியாத வலி, சிறுநீர் கழித்தலில் சிரமம் போன்ற உள்ளிட்ட அறிகுறிகளை உள்ளடக்கிய வால்வோவேஜினல் அட்ராபி என்ற குறைபாட்டை உண்டாக்குகிறது. இருந்தபோதிலும், இந்த லேசர் சிகிச்சைக்கு, தோல் மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

வேஜினல் பகுதியில் லேசர் சிகிச்சையை செய்துகொண்டதற்கு பிறகு, உடலுறவில் ஈடுபடும் போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வலி ஏற்படுவதாக, இந்த சிகிச்சையை மேற்கொண்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

​பக்க விளைவுகள்

இதுமட்டுமல்லாது யோனிப்பகுதி கிழிவது போன்ற கடுமையான உணர்வு, ரத்தப்போக்கு, திசுக்களில் வடுக்கள் உருவாதல், யோனிப்பகுதியில் லேசான வீக்கம், உடலுறவில் ஈடுபடும்போது யோனிப்பகுதியில் நெகிழ்வுத்தன்மை குறைவது போன்ற உணர்வால் கடுமையான வலி, யோனிப்பகுதியில் காற்று அடைத்திருப்பது போன்ற உணர்வு, மலம் கழிக்கும்போது கடுமையான எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போதும் அதை அடக்கும்போதும் ஒரு அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வுகள், இந்த லேசர் சிகிச்சை செய்துகொண்ட பிறகு தாங்கள் உணர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

​அகற்றிய பின் ஏற்படும் பிரச்சினைகள்..

லேசர் சிகிச்சையின் மூலம் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள முடியை அகற்றிய பின்பு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை அடைகின்றனர். சிலருக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. சிலருக்கோ சிறிய அளவிலேயே பாதிப்புகள் ஏற்படுகின்றன. பலருக்கோ, சிகிச்சை மேற்கொண்ட சில நேரங்களிலேயே, அந்த இடம் வீங்குவதோடு மட்டுமல்லாது, சிவப்பு தடிப்புகளாகவே மாறிவிடுவதும் உண்டு.

பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடிகளை, லேசர் சிகிச்சையின் மூலம் நீக்கியவர்களுக்கு ஏற்படும் சில பக்க விளைவுகளை இங்கு பட்டியல் இட்டுள்ளோம். நீங்கள் லேசார் மூலம் உங்கள் அந்தரங்க முடிகளை அகற்றியிருந்தால் உங்களுக்கு இந்த வகை பாதிப்புகள் ஏற்பட்டனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

சிறிது நேரத்திற்கு எரிச்சல், சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் வெடிப்பு போன்ற உணர்வு

தோல் பகுதியில் சிவப்பு தடிப்புகள்

கருப்பாக உள்ளவர்களுக்கு, அவர்களின் உடலில் உள்ள நிறமியில் தற்காலிக மாற்றங்கள்

சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் வீக்கம்

தோலை, ரப்பர் பேண்ட் போட்டு இழுப்பது போன்ற உணர்வு இருப்பதாக, இந்த சிகிச்சை செய்து கொண்ட பல பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சிகிச்சை நடைபெற்ற போது, ரத்த ஓட்டத்தில் மாறுபாடு, இதயத்துடிப்பு குறைதல், சுவாசித்தலில் தடங்கல் உள்ளிட்ட இன்னல்கள் ஏற்படுதல்

சிகிச்சையின் ஒருபகுதியான எலக்ட்ரோலைசிஸ் முறையால், தோலில் வடுக்கள் தோன்றுதல், தோலின் நிறத்தில் மாற்றம் போன்ற நிகழ்வுகள், சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் நிகழ்கின்றன. இந்த சிகிச்சையினால், தோலின் நிறம் மாறுதல், தீக்காயங்கள், வடுக்கள் தோன்றுதல், முகப்பரு போன்ற கொப்புளங்கள் உள்ளிட்டவைகள் ஏற்படுவதாக இந்த சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker