தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்!

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது சில குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும். பிறந்த குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கும் என்றாலும் மாதங்கள் செல்ல செல்ல தாய்ப்பால் பற்றாக்குறை ஆகும். இதை தடுக்க உணவு முறைகள் மட்டுமே போதாது. வாழ்க்கை முறைகளிலும் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பற்றாக்குறையில்லாமல் தாய்ப்பால் கிடைக்க இளந்தாய்மார்கள் முயற்சி செய்தாலும் சமயங்களில் தாய்ப்பால் பற்றாக்குறையாகிவிடுகிறது. தாய்ப்பால் சுரக்க போதுமான அளவு உணவுகள் எடுத்துகொண்டாலும் என் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் இருக்கவே செய்கிறது என்கிறார்கள் பல இளந்தாய்மார்களும்.

குழந்தை பால் உறிஞ்சு குடிக்கும் போதுதான் பால் சுரப்பு அதிகரிக்கிறது. குழந்தை மார்பு காம்புகளை உறிஞ்சும் போது அது மூளைக்கு தகவல் அனுப்புகிறது. அது ஆக்ஸிடாசினை உற்பத்தி செய்கிறது. ரத்த திசுக்கள் வழியே மூளைக்கு செய்தி சென்று மார்பகங்களை வந்தடைகிறது. இது ப்ரோலாக்டின் மூலம் பால் சுரப்பை தூண்டுகிறது.

என்ன சாப்பிட்டால் குழந்தைக்கு நிறைவான தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று நினைக்கும் அம்மாக்கள் மற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் போது என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்வது போன்று கை வைத்தியமாக அன்றாடம் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைக்கு சரியான அளவில் தான் தாய்ப்பால் கொடுக்கிறோமோ என்ற சந்தேகம் எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும். இதற்கான பதிலை குழந்தையின் எடையை அவ்வபோது பரிசோதிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

தாய்ப்பாலை இயற்கையாகவே சுரக்க வைக்க அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குழந்தைக்கு பால் தரும் போது ஒரு பக்கம் மட்டுமே கொடுக்காமல் இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி சம அளவில் கொடுங்கள். குழந்தை பத்து நிமிடங்கள் தான் பால் குடிக்க எடுத்துகொள்கிறார்கள் என்றால் வலது மார்பில் ஐந்து நிமிடங்களும், இடது மார்பில் ஐந்து நிமிடங்களும் பால் கொடுக்க வேண்டும். அல்லது முதல் முறை வலது பக்கம் பால் கொடுத்தால் அடுத்த முறை இடது பக்கம் பால் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் பால் இரண்டு மார்பகங்களில் சம அளவு சுரக்க கூடும்.

குழந்தைக்கு தாய்ப்பால் தருவதற்கு தற்போது சிலிக்கான் நிப்பிளை மார்பிள் பொருத்தும் பழக்கம் உள்ளது. அது மருத்துவ காரணங்களுக்காக தவிர்க்க முடியாத நிலையில் சரியான தீர்வாக இருக்கும். ஆனால் எல்லோரும் எல்லா நேரங்களிலும் அதை பொருத்துவது சரியானதல்ல. இது குழந்தைக்கு செயற்கையான பாலூட்டுதல் போன்றது. மேலும் இதனால் தாய்ப்பால் சுரப்பு குறையவும் கூடும்.

தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் போது மார்பகங்கள் கனமாக இருக்கும். பலரும் அப்படியே இருந்து குழந்தைக்கு பால் கொடுப்பார்கள். ஆனால் குழந்தை பால் குடித்து முடித்ததும் மார்பகங்களில் இருக்கும் அதிகப்படியான பாலை வெளியே பிய்ச்சி எடுப்பது தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்க கூடும். அதோடு தாய்ப்பால் நீண்ட நேரம் மார்பில் இருந்து பால் கட்டிகொள்வதும் தடைபடும். தாய்ப்பால் பீய்ச்சிய பிறகு குழந்தை பால் குடிக்கும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகமாக இருப்பதை நீங்களே உணருவீர்கள். சரியான இடைவெளியில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டாம்.

குழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் அம்மாக்களுக்கு உண்டு. இன்னும் சிலர் குழந்தை தாய்ப்பால் குடித்து முடித்து சிறுநீர் கழித்ததும் உடனே தாய்ப்பால் கொடுப்பார்கள். இதுவும் சரியானதல்லா. நார்மலாக குழந்தை தாய்ப்பாலுக்கு பிறகு மூன்று அல்லது நான்குமுறை சிறுநீர் கழித்த பிறகு தான் பசியில் அழுவார்கள். அதோடு குழந்தை தூக்கத்துக்கும் அழும் என்பதால் குழந்தையின் அழுகை எதற்கு என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் உணவு என்பது போலவே அவர்கள் வளர வளர மாதங்கள் கூடிய பிறகும் தாய்ப்பாலை பிரதானமான உணவாகவே கொடுக்க வேண்டும். குழந்தைக்கு வேறு திரவ உணவுகள் கொடுக்கும் போதும், திட உணவுகள் கொடுக்கும் போதும் தாய்ப்பாலை தவிர்க்கும் அளவுக்கு கொடுத்துவிட வேண்டாம். தாய்ப்பாலுக்கு பிறகு தான் இணையான உணவுகள் என்பதை அம்மாக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்க உள்ளாடைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். தூய்மையான உள்ளாடைகள் மார்பக காம்புகளில் புண்களை உண்டாக்காது. அதனால் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகள் தாய்ப்பால் சுரப்பு கட்டுப்படுத்தக்கூடும். அதனால் மார்பகங்களின் சரியான அளவில் உள்ளாடை அணிவது அவசியம்.

மார்பகத்தை மசாஜ் செய்வதன் மூலம் பால் சுரப்பது மேம்படும். மார்பகத்தில் பால் கட்டிகொள்வதால் பால் சுரப்பு தடைபடும். சமயங்களில் தாய்ப்பால் கட்டிகொள்ளவும் செய்யும். அந்த நேரத்தில் மார்பகத்துக்கு மசாஜ் செய்வது நல்லது. பால் கட்டிகொள்ளும் போது மென்மையான மசாஜ் செய்தால் பால் வெளியேறும். பால் கட்டும் சிக்கல் இல்லாத நிலையிலும் மார்பகங்களுக்கு மிதமான வெந்நீரில் மசாஜ் செய்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யலாம்.

குழந்தையை அணைத்தப்படி பால் கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் குழந்தைக்கும் இடையேயான ஸ்பரிச உணர்வு இருவருக்குமே பாதுகாப்பை உணர வைக்கும். மன அழுத்தமில்லாமல் இருக்க செய்யும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker