தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளுக்கு ஏன் தலையில் அதிகம் வியர்க்கின்றது?

சில குழந்தைகளில் தலையை தொட்டுப்பார்த்தால் வியர்வை அதிகமாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு வரும்.

உடனே அவர்கள் மருத்துவரிடம் ஓடி போய் குழந்தையை காட்டுவார்கள். குழந்தைகளுக்கு தலை வியர்த்து போவது ஒரு சாதாரண விஷயம் தான். இதற்காக பெற்றோர்கள் பயப்பட வேண்டாம்.

குழந்தை பருவத்தில் தான் அனைத்து வகை வளர்ச்சிகளும் நிகழ்கின்றன. அந்த வகையில், இனிப்பு மொட்டுக்கள் முதலில் தலையில் தான் குழந்தைகளுக்கு உருவாகிறது.

வளர வளர அது உடல் பாகங்களுக்கு மாற்றப்பட்டு, வளர்ந்த பின் சில வருடங்களில், இனிப்பு மொட்டுக்களின் உருவாக்கம் நிறைவுபெறும். இவை தலையில் இருப்பதால், அதிகம் குழந்தைகளுக்கு அதிகமாக வியர்க்கும்.

குழந்தைகளின் தலை வியர்ப்பது, மூளையின் வளர்ச்சியையும் குறிக்கிறது. குழந்தையின் தலையில் வியர்க்கவில்லை எனில், மூளையின் செயல்பாடு சரியானதாக இல்லை என்று தான் அர்த்தம்.

குழந்தைகளின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 130 துடிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70-90 துடிப்புகள் இருக்கும். குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கிறது. இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாக அமைகிறது.

இப்படி அதிகம் வியர்த்தால், வாரத்திற்கு இருமுறை குழந்தைகளுக்கு தலைக்கு குளிக்க வைக்க வேண்டும். குளித்தபின், தலையை நன்றாக துவட்ட வேண்டும். ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அதிக வியர்வையால் வாடை வராது.

குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்ப்பதால் குழந்தைகள் தலையை எப்போதும் சொரிந்து கொண்டே இருக்கும் நிலை வரும். அப்போது உடனே பெற்றோர்கள் குழந்தைகளை தலைக்கு குளிக்க வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தான் அதிகமாக வியர்க்கும். அந்த சமயத்தில் குழந்தைகளின் உடல், தலை என அனைத்தை உடல் பாகங்களையும் போர்வையால் மூட கூடாது. எப்பொழுதுமே தலையை மூடாமல், குழந்தை தூங்கும் அறையில் நல்ல காற்று வசதி, வெளிச்சம், தூய்மை இருப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தரும்.

குழந்தைகளுக்கு அதிகம் வியர்வை ஏற்படுவதால் மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளின் முடியை வெட்டிவிட வேண்டும். அல்லது மொட்டையடித்து விடலாம். இதனால் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்க முடியும்.

இதனால்தான் குழந்தைகளுக்கு ஒரு வயது ஆனதும் கோவிலுக்கு சென்று மொட்டை போடும் பழக்கம் நம் மக்களிடம் உள்ளது.

நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டார்கள். பாரம்பரிய சம்பிரதாயங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் அறிவியல் ரீதியிலான பல உண்மைகள் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker