ஆரோக்கியம்புதியவை

குழந்தைக்காக ட்ரை பண்றீங்களா? இந்த ஆசனங்கள் செய்ங்க… கரு சீக்கிரம் தங்கிடும்…

யோகா என்பது நமது அடிப்படை கடமைகளில் ஒன்றாகும். அதனை நமது தினசரி செயல்பாடுகளில் ஒன்றாக யோகா செய்ய வேண்டும். ஆரோக்கியமான முறையில் இயற்கையாகக் கருத்தரிக்க உடலை எப்படி தயார்ப்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.

நமது முன்னோர்களின் வழியாக நமக்கு கிடைத்த இந்த அறிவினை நாம் பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற பயன்களை அடையலாம். நாம் இப்பொழுது கருவுருதலுக்கு பயன்படும் யோகாசன முறைகளை பற்றி பார்க்கலாம். நம்முடைய உடலை இயற்கையான முறையில் ஆரோக்கியமாக கருப்பையை தயார் செய்வதற்கு சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதன்மூலம் கருப்பையை பலப்படுத்தலாம். அப்படி என்னென்ன ஆசனங்களைச் செய்வதன் மூலம் கருப்பையை பலப்படுத்தி, கரு உருவாதலை வேகப்படுத்த முடியும்.

ஜானுசீராசனம்

ஜானுசீராசனம் கருவுருதலுக்கான மிக முக்கிய ஆசனமாகும். முதலில் ஒரு விரிப்பில் கால்களை நேராக விரித்து அமர்ந்து கொண்டு வலது காலை நன்றாக மடக்கி இடது தொடையின் கடைசிப் பகுதியை அழுத்துவது போன்று மடக்க வேண்டும். வலது காலை நன்றாக விரித்துக் கொள்ள வேண்டும்.

பின் இடது கையை வலது தொடயின் முட்டில் வைத்து வலது புறமாக உடலை திருப்ப வேண்டும். இடுப்பின் மீது வலது கையினை வைத்து உடல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின் இடது புறமாக திரும்ப வேண்டும். தொப்புளானது நன்றாக சுருங்கி விரிய வேண்டும்.

பின், தலையை தூக்கிக் கொண்டு இரண்டு கைகளையும் ஒன்று சேர்ந்து நேராக நீட்டப்பட்டிருக்கும் இடது காலினை தொட வேண்டும். பின் குதிக்காலினை இரண்டு கைகளாலும் நன்றாக பிடித்துக் கொண்டு உடலினை சரிவாக்கி நன்றாக மூச்சு விட வேண்டும். பின் நன்றாக குனிந்து அடிவயிறானது தொடையை நன்றாக அழுத்துமாறு குனிந்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வித்து ஆற்றல் உருவாகுதல், உடலின் உயிர் சக்தி அதிகரித்தல் போன்றவை நிகழ்கின்றன.

​பத்த கோணாசனம்

பத்த கோணாசனம் என்பது விரிப்பில் இரண்டு கால்களையும் மடித்து உட்கார்ந்துக் கொண்டு முதுகை நேராக நிமிர்த்தி அமர்ந்து உட்கார வேண்டும்.

சுண்டு விரலையும் ஆட்காட்டி விரலையும் மடக்கி வைத்துக் கொள்வது தான் யோக முத்திரையாகும். பின், மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். இதனை சுகாசனம் என்று அழைப்பார்கள்.

பின் இரண்டு கால்களையும் நேராக நீட்டி இரண்டு குதிக்கால்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் வண்ணம் மடக்கி அமர்ந்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டு கைகளையும் வணக்கம் என்று சொல்வது போல குவித்து நெஞ்சில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் சீராக மூச்சினை விட வேண்டும். பெண்களுக்கு எளிமையான இந்த ஆசனமானது சில வகைகளில் இருக்கின்றன. அவை அனைத்துமே கருவுருதலுக்கு நல்ல பங்களிப்பினை செய்ய கூடியதாகும்.

ஹஸ்தபாதாசனம்

ஹஸ்தபாதாசனம் என்பது விரிப்பில் நேராக நின்றுக் கொண்டு இரண்டு கைகளையும் மேலே தூக்க வேண்டும். பின் அப்படியே கீழே நோக்கி வந்து இரண்டு கைகளையும் கால்களை ஒட்டி தரையில் பதிக்க வேண்டும்.

இவை அனைத்தையும் மிக மெதுவாக அதே நேரத்தில் நேர்த்தியாக செய்ய வேண்டும். பின் கிழே வந்தது போலவே மீண்டும் மேலே எழ வேண்டும்.

பின் சீரான சுவாசத்தினை மேற்கொள்ள வேண்டும். பின் இரண்டு கைகளையும் கீழே இறக்கிக் கொள்ள வேண்டும். இது கொஞ்சம் கடினமான ஆசனம் என்றாலும் உடல் முழுவதும் நல்ல மாற்றத்தினை உருவாக்க கூடியது ஆகும்.

குய்யபாதாசனம்

குய்யபாதாசனம் என்பது கருவுருதலுக்கான மிக முக்கிய ஆசனங்களில் ஒன்றாகும். இது பத்த கோணாசனத்திலிருந்து சற்று மாறுபட்டது தான். விரிப்பில் இரண்டு கால்களையும் மடித்து உட்கார்ந்துக் கொண்டு முதுகை நேராக நிமிர்த்தி அமர்ந்து உட்கார வேண்டும்.

பின் இரண்டு கால்களையும் நேராக நீட்டி இரண்டு குதிக்கால்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்துக் கொள்ள வேண்டும்.

பின் இரண்டு கைகளையும் நேராக நீட்டி யோக முத்திரை வைக்க வேண்டும். பின், மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். அதன்பின், அப்படியே குனிந்து இரண்டு கால்களையும் நமது தலையானது தொடுவது போல அமர்ந்துக் கொண்டு சுவாசத்தை சீராக செய்ய வேண்டும்.

​பச்சிமோத்தான் ஆசனம்

ஒருவர் யோகா செய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார் என்பதை கண்டறிவதற்கு இந்த ஆசனம் ஒன்றே போதுமானது ஆகும். ஏனெனில், இந்த யோகாவை செய்வதால் உடலின் உள் உறுப்புகளை சரியாக இயங்க வைப்பதன் மூலம் இதயத்திற்கு நல்ல பலனை தருகிறது. இது கொஞ்சம் கடினமான யோகா என்றாலும் பயிற்சியினால் எளிதாக செய்ய முடியும்.

முதலில், உங்கள் விரிப்பில் அமர்ந்துக் கொண்டு இரண்டு கால்களையும் ஒன்றாக விரித்துக் கொள்ள வேண்டும். அதாவது, உங்கள் உடல் ’எல்’ என்ற ஆங்கில வடிவம் போன்று இருக்க வேண்டும். மூச்சினை நன்றாக இழுத்து வெளியே விட வேண்டும்.

இப்பொழுது உடலில் காற்று இருக்காது. இந்த நேரத்தில் நன்றாக குனிந்து உங்கள் இரண்டு காலிற்கும் அடியில் கணுக்காலை பிடிக்க வேண்டும். உங்கள் தலையானது முட்டியில் பதிந்து, தரையினை பார்த்தவாறு இருக்க வேண்டும். பின் இயல்பு நிலைக்கு வந்து மூச்சினை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விடுவதன் மூலம் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.

​எப்படி செயல்படுகிறது?

இந்த ஆசனங்கள் உங்களின் உடலில் உயிர் சக்தியை அதிகரிப்பதன் மூலம் கரு உருவாவதற்கான வகையில் உடலினை வழுப்படுத்துகிறது. ஆசனங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு அதிகப்பட்சமாக முப்பது நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

இந்த ஆசனங்கள் நம் வாழ்வில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இறுக்கமான ஆடைகளை யோகாவின் பொழுது தவிர்ப்பதன் மூலம் உடலின் பாகங்களை இயக்குவதற்கு நல்ல வசதியாக இருக்கும்.

யோகாவை செய்வதற்கு அடிப்படையான சில விசயங்களை செய்ய வேண்டும். அது உடல், மனதினை ஒருமுகப்படுத்தும் சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளுதல், இரவில் சீக்கீரம் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுதல் போன்றவை அவசியமான ஒன்றாகும்.

உடலின் உள்ளுறுப்பினை சரியான விகிதத்தில் செயல்பட தூண்டுவதற்கு இந்த செயல்கள் இன்றியமையாததாகும். கருப்பப்பைக்கு பலம் அளிக்கு ப்ளூ டீ எனப்படும் சங்கு பூவினால் உருவாக்கப்படும் டீயினை பருகுவது கருப்பப்பையினை சுத்தப்படுத்துவதுடன் ஆற்றலையும் வழங்குகிறது. அது இயற்கை கொடுத்த வரமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker