தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பிரசவத்துக்கு பிறகு உடல் வலி, எப்ப சரியாகும், எது அப் நார்மல், பெண்கள் அறிய வேண்டிய விஷயம்!

கர்ப்பகாலம் போன்றே பிரசவக்காலத்துக்கு பிறகும் சில உபாதைகள் தொடரக்கூடும். அது தீவிரமாகவோ அல்லது மிதமாகவோ இருக்கலாம்.
இது பயப்படக்கூடிய வலிகள் அல்ல. உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில காலம் ஆகலாம். இந்த கால கட்டத்தில் உடல் வலிகள் தீவிரமாகத்தான் இருக்கும். சுகப்பிரசவமாக இருந்தாலும் அறுவை சிகிச்சையாக இருந்தாலும் இந்த வலி உபாதை பொதுவானது தான்.

அதே போன்று இந்த வலியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறிது மாறுபடவும் கூடும். என்ன மாதிரியான வலிகள் உண்டாக கூடும் என்பது குறித்து ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்வது அவசியம்.

​பிரசவத்துகு பிறகு முதுகுவலி

கர்ப்பகாலத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்கள் காரணமாக பிரசவத்துக்கு பிறகு முதுகுவலி உண்டாகலாம். பிரசவக்கால வலியின் போது உண்டாகும் உடல் அழுத்தங்கள் முதுகின் தசையில் அதிக வலியை உண்டு செய்கிறது. இந்த தசைகள் வலிமையடையும் வரை இந்த வலியானது விட்டு விட்டு இருக்கலாம். இது 6 முதல் 8 வாரங்கள் வரை இருக்கலாம்.

தசை வலிமைக்கு மிதமான உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் அவசியம். கர்ப்பத்துக்கு முன்பு முதுகுவலியை கொண்டிருக்கும் பெண்கள் பிரசவத்துக்கு பிறகு அதிகமான வலியை உணர்வார்கள். அதிக எடை கொண்டிருந்தால் இந்த வலி உபாதை அதிகரிக்க செய்கிறது.

​பிரசவத்துக்கு பிறகு வயிற்றுவலி

விரிவடைந்த கர்ப்பப்பை பிரசவத்துக்கு பிறகு சுருங்க தொடங்கும். அப்போது இலேசான அதே நேரம் கூர்மையான உணர்வு சிலருக்கு இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் போதும் வயிற்றில் இலேசான பிடிப்பு உண்டாகும். வெகு அரிதாக சிலருக்கு பிறப்புறுப்புத்தொற்றுகள், குடல் அழற்சி கருப்பை நீர்க்கட்டி சுழற்சி, நீர்க்கட்டி சிதைவு போன்ற சிக்கல்கள் இருந்தாலும் இந்த வயிற்று தசை பிடிப்புகள் அதிகமாக உணர்வீர்கள்.

வயிறு வலி மேல் அல்லது கீழ் இருக்கலாம். மேல் வயிறு வலி அரிதானவை மற்றும் நோய்த்தொற்றுகள் குடல் அழற்சி காரணமாக உண்டாகலாம். அதனால் அதிக வயிற்றுபிடிப்பை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

சிலருக்கு இரைப்பை அழற்சி அல்லது செரிமானம் காரணமாக உணவுக்கு பிறகு வயிறு வலி உண்டாகலாம். ஆறுமாதங்கள் வரை கூட வாய்வு பிரச்சனையோடு சிலர் இந்த வலியை அனுபவிப்பார்கள். உணவு மாற்றம் மூலம் இதன் தீவிரத்தை குறைக்க முடியும்.

​பிரசவத்துக்கு பிறகு இடுப்பு எலும்பு வலி

கர்ப்பகாலத்தில் ஹார்மோன்கள் இடுப்பு எலும்புகளை விரிவாக்க செய்பவை. இதுதான் பிரசவத்துக்கு உதவுகிறது. தசைநார்கள் தளர்ந்து இருக்கும் இக்காலத்தில் அன்றாட பணிகள் இல்லாமல் சாதாரணமாக நடந்தாலும் இடுப்புவலியை உண்டாக்கிவிடும். ஏனெனில் பிரசவத்தின் போது இடுப்பு திசுக்கள் மற்றும் தசைகளில் தளர்வு பிரசவகாலத்துக்கு பிறகு இடுப்பு வலி உண்டாக கூடும். உடலுறவின் போது சிறுநீர் கழிப்பதில் சிரமம் குடல் இயக்கத்தின் வலி போன்றவையும் இடுப்புவலியை உண்டாக கூடும்.

​பிரசவத்துக்கு பிறகு கால்வலி

கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிப்பதன் மூலம் கால்களில் வலி உண்டாக கூடும். கால் தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதால் பிரசவக்காலத்துக்கு பிறகு கால் பிடிப்புகள் பொதுவானவை.

பிரசவத்துக்கு பிறகு ஹார்மோன் மாற்றங்கள் சமநிலை அடையும் போது மூட்டுகள் மற்றும் தசைநார்கள் தளர்வை உண்டாக்கும். அப்போது கால் பிடிப்புகள் அதிகரிக்க செய்யும். பிரசவத்தின் போது கொடுக்கப்படும் நரம்பு மருந்துகள், தாய்ப்பால் கொடுக்கும் நிலை தூக்கமின்மை, மெக்னீசியம் குறைபாடு என எல்லாமே கால் வலிக்கான காரணங்களாக இருக்கலாம். அதோடு உடல் பலவீனம் ஆகும் போது இந்த வலி உணர்வு மேலும் அதிகரிக்க கூடும்.

​பிரசவத்துக்கு பிறகு இடுப்பு வலி

இது சுகப்பிரசவத்தை கொண்டவர்களுக்கு உண்டாக கூடிய பொதுவான வலி. சுகப்பிரசவக்காலத்தில் இடுப்பு எலும்புகள் யோனி பகுதியிலும் இடுப்பு பகுதியிலும் அதிக அதிர்ச்சியை உண்டு செய்கிறது. பிரசவிப்பதில் சிக்கல் உண்டாகும் போது குழந்தையின் தலையை வெளியே மெதுவாக இழுக்கும் போது அது இடுப்பு பகுதியை காயப்படுத்தலாம்.

சமயங்களில் இலேசாக பிடிப்பை, முறிவை உண்டாக்கலாம். பிரசவ நேரத்தில் இதை உணராமல் பிரசவத்துக்கு பிறகு கடுமையான வலி உண்டாகும் போது இதை நீங்கள் அறியக்கூடும். எனினும் இந்த வலி தொடர்ந்து இருந்தால் பிரசவித்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

​பிரசவத்துக்கு பிறகு மார்பு வலி

பிரசவத்துக்கு பிறகு உடல் தசைகள் காரணமாக கர்ப்பத்துக்கு பிறகு மார்பு வலி உண்டாகலாம். இது நுரையீரலில் ரத்த உறைவு தமனியை தடுப்பதால் உண்டாகலாம். இது வெகு அரிதானது என்றாலும் மார்பு வலி தீவிரமாக இருக்கலாம். இதனால் கடுமையான வலியோடு மூச்சுத்திணறல், இருமலில் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. அதே நேரம் தாய்ப்பால் கட்டு இருந்தாலும் மார்பில் வலி உண்டாகும். அதனால் பயப்படாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

​பிரசவத்துக்கு பிறகு தலைவலி

பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாயின் உடலில் ஆக்ஸிடாசின் என்னும் ஹார்மோன் சுரக்கும். அப்போது தலைவலி உண்டாகலாம். இது பாலூட்டும் போது உண்டாகும் தலைவலி என்று சொல்லப்படுகிறது. இது தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை இருக்காது.

ஆனால் பிரசவித்த சில வாரங்கள் வரை நீடிக்க செய்யும். வெகு சிலருக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை விட்டு விட்டு தலைவலி உண்டாகலாம். அதே நேரம் தீவிரமான தலைவலியானது சோர்வு, ப்ரீக்ளாம்ப்சியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் தொடர்ந்து தலைவலி இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுவிடலாம்.

​பிரசவத்துக்கு பிறகு தொடை வலி

பிரசவக் காலத்தில் இடுப்பு பகுதி தசைநார்கள் கூர்மையான வலிகளை அல்லது மிதமான வலிகளை தொடைகளுக்கு நீட்டிக்கிறது. பிரசவத்தின் போது சுகப்பிரசவத்தில் குழந்தையை வெளியேற்றும் முயற்சியின் போது கால்களுக்கும் அதிகமாக தொடைகளுக்கும் கடும் உழைப்பு கொடுக்க வேண்டியுள்ளது. அப்போது தசைகளும் வலுவை இழக்கிறது. எனினும் இந்த தாக்கம் சில வாரங்களில் குறைந்துவிடக்கூடியது.

பிரசவக்காலத்தில் மணிக்கட்டு,மூட்டுகள், கணுக்கால் போன்ற பகுதிகளில் காயங்களை உண்டாக்க செய்யும். இந்த பிரசவக்காலத்தில் உடல் அழுத்தம் காரணமாக இந்த வலிகள் உண்டாகிறது. அதோடு தாய்ப்பால் நிலைகள் மாறும் போதும் உடல் வலி உபாதை அதிகரிக்க செய்கிறது. எனினும் மேற்கண்ட வலிகள் எல்லாமே பிரசவத்துக்கு பிறகு 6 முதல் 8 வாரங்களுக்குள் சரியாகிவிடக்கூடும். வலி உபாதை தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker