இரவில் படுத்தவுடன் இதை செய்யுங்கள்: அப்பறம் பாருங்க
இரவில் சிலருக்கு படுத்தவுடன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் பலருக்கும் அதில் பிரச்சனை உண்டு.
படுத்தவுடன் உறங்குபவர்களை விட நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். அவர்கள் இரவில் படுத்ததும் மூச்சு தியானத்தை செய்தால் நல்ல பலனை பெறலாம்.
மூச்சு தியானம் செய்வது எப்படி?
உள் மூச்சு மற்றும் வெளி மூச்சினை விடும் போது நம் மூளையானது தனது செயல்பாடுகளை நிறுத்து விட்டு அமைதியான நிலைக்கு தானாகவே வரும்.
அதனால் மூக்கின் வழியே சுவாசத்தை 4 நொடிகள் உள் எடுத்து 7 அல்லது 8 நொடிகள் மூச்சை உள் நிறுத்தி, அதன் பின் வாய் வழியே 8 நொடிகள் வெளி மூச்சை விட வேண்டும். இப்படி செய்யும் போது மூளை புத்துணர்ச்சி பெறுவதுடன், தூக்கமும் நன்றாக வரும்.
பலன்கள்
தினமும் இந்த தியானத்தை இரவில் தொடர்ச்சியாக செய்து வந்தால் இதயம் ஆரோக்கியமாகும், ரத்த அழுத்தம் மற்றும் தேவையற்ற பதட்டங்கள் குறைந்து மனம் அமைதி பெறும்.
மேலும் 60 நொடிக்கும் குறைவான நேரத்திலே ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.