ஆரோக்கியம்புதியவை

தொடைப்பகுதியுள்ள கொழுப்பை எளிதில் கரைக்கும் வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க

பொதுவாக சிலருக்கு தொடைகளில் அதிகப்படியான தசைகள் காணப்படும்.

இதனை கரைப்பதற்காக பலரும் பல வகையில் கடினமான உடற்பயிற்சிகளை செய்து கொண்டு தான் வருகின்றார்கள்.

இருப்பினும் தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை ஆகும்

அவ்வகையில் தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க கூடிய பயிற்சி ஒன்றினை இங்கு பார்ப்போம்.

லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise)

இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும்.

இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும்.

வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.

இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.

பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியினை செய்வதனால் தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker