தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தை அழுதுகிட்டே இருந்தா இந்த பிரச்சினையாகத்தான் இருக்குமாம்!

பிறந்த குழந்தை அழுவதும், தூங்காமல் விழித்துகொண்டே இருப்பதும் தாய்மார்களுக்கு கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கும்.

குழந்தை அழுதுகிட்டே இருந்தா செய்வதறியாமல் தாய்மார்கள் மிகவும் தவித்துப்போவார்கள்.

இந்நிலையில் குழந்தை தாய்ப்பால் குடிக்காமல் அழுதுகிட்டேஇருந்தால் கவனிக்க பட வேண்டிய விஷயம்தான். உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

குழந்தை சிறிது இடைவேளைக்கு பிறகும் தாய்ப்பால் குடிக்காமல் இருந்தால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

நீங்களாக வலுக்கட்டாயமாக குழந்தைக்கு பால் கொடுத்தாலும் குழந்தை தாய்ப்பால் குடிக்காமல் இருந்தால் இதை கவனிக்க வேண்டும்.

உரிய இடைவெளியை தாண்டி குழந்தை பசியால் இருக்கும் போது குழந்தை பசிக்காக அழும். அப்போது தாய்ப்பால் கொடுத்தும் குழந்தை பால் குடிக்காமல் அழுதால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சில குழந்தை அமைதியாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கும் போது மட்டும் வேகமாக அழத்தொடங்கும். குழந்தைக்கு தாய்ப்பால் குடிக்க தெரியவில்லை என்று சிலர் தாய்ப்பாலை பாலாடையில் எடுத்து குடிக்க வைப்பார்கள். குழந்தை பசியாறியதும் அமைதியாகும். ஆனால் இது சரியான முறை கிடையாது.

பிறந்த குழந்தைக்கு 1 டீஸ்பூன் அளவு பாலே போதும். என்றாலும் குழந்தை வளர வளர பாலின் அளவு அதிகமாக தேவைப்படும். அதோடு தாய்ப்பாலை உறிஞ்சு குடிக்கும் போதுதான் பால் சுரக்கவும் தொடங்குகிறது. இதை தாண்டி குழந்தை பிறந்த புதிதில் தாய்ப்பால் குடித்துவிட்டு பிறகு பால் குடிக்காமல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது.

குழந்தைகள் எதனால் அழுதுகொண்டே இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்:

 • குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது குழந்தை பால் குடிக்க மறுக்கும்.
 • குழந்தை பால் குடிக்க அடம்பிடித்தால் முதலில் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கும்.
 • குழந்தைகள் தங்கள் உடலில் உண்டாகும் அசெளகரியத்தை தாய்ப்பால் மறுப்பதும், அழுவதும் மூலமும் தான் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்.
 • குழந்தை பசிக்காக அழும் வரை இல்லாமல் உரிய இடைவேளையில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
 • குழந்தை அழுத பிறகு பாலை கொடுக்க முற்பட்டால் குழந்தை வேகத்தில் பாலை குடிக்க விரும்பாது.
 • முதலில் குழந்தையின் அழுகையை நிறுத்தும் வகையில் தோளில் போட்டு ஆறுதல் படுத்தி பிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
 • குழந்தையை சரியாக பிடித்திருந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
 • குழந்தையின் வாய் சரியாக மார்பு காம்புகளில் பிடிக்காவிட்டாலும் பால் கிடைக்காமல் அழத் தொடங்கும்.
 • பிறந்த முதல் நீங்கள் எப்படி தாய்ப்பால் கொடுத்தீர்களோ அதே போன்று கொடுக்க வேண்டும்.
 • இதில் அவ்வபோது மாற்றி மாற்றி வைத்து கொடுத்தாலும் குழந்தைகள் குடிக்க விரும்பாது.
 • குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கும்.
 • அதனால் பாலை உறிஞ்சு குடிப்பதில் அதை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாலும் பால் குடிக்க அடம்பிடிப்பார்கள்.
 • அந்த மாதிரி நேரங்களில் குழந்தையின் தலையை சற்று உயர பிடித்தவாறு வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
 • பால் பற்றாக்குறை இருந்தாலும் பால் வருவது குறைந்தாலும் கூட குழந்தைகள் அழ ஆரம்பிக்கும்.
 • குழந்தை பசியோடு இருக்கும் போது பால் உறிஞ்சும் போது போதுமான அளவு பால் வரத்து குறைந்தாலும் பால் குடிக்காமல் அழ ஆரம்பிக்கும்.
 • வயிற்றுக்கோளாறு, செரிமானப் பிரச்சனை, வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தை பால் குடிக்காமல் அழும்.
 • குழந்தைக்கு வயிறுவலிதான் என்பதை குழந்தையின் வயிற்றை தொட்டு பார்த்தாலே உணர்ந்துவிட முடியும். குழந்தையின் வயிறு உப்பி இருக்கும். மிருதுவாக இல்லாமல் சற்று கனமாக இருப்பது போன்று தெரியும். இதனாலும் குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்து அழுதுகொண்டு இருக்கும்.
 • குழந்தை பால் குடிக்க மறுக்கும் போது இதையெல்லாம் அம்மாக்கள் கவனிக்க வேண்டும்.
 • குழந்தை இந்த அறிகுறிகளோடு அழுதுகொண்டே இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker