கவிதைகள்புதியவை

வெற்றியின் சூத்திரம்

வெல்லும் வரை இல்லை
தோல்வி
நாம் முயற்சி செய்யாமல் இருக்கும் வரைதான் தோல்வி

தோல்வியின் காரணம் விட்டுவிட்ட முயற்சி
வெற்றியின் காரணம் விடா முயற்சி……

அன்பு ஆயிரம் நண்பரை உருவாக்கும்
கோபம் இருக்கும் நண்பரையும் வேரறுக்கும்

பணம் எவளோ இருந்தாலும்
பிறருக்கு கொடுத்து உதவ வில்லை என்றால் உனக்கும்
அந்த பணத்திற்கும் ஒரே பெயர் தான்
பேப்பர் வெத்து பேப்பர்

எட்டி பிடிக்க முடியாத இடத்தில தான் வெற்றி இருக்கும்
முயற்சி செய்து தொட்டு பறிக்கும் ஒருவனுக்கு தான் அந்த வெற்றியும் கிடைக்கும்

நீ எப்பொழுது உயர்ந்தவன் ஆகிறாய் என்றால்
உன்னை விட சிறியவர் என்றாலும் மரியாதையோடு அவர்களுடன் பழகும்.பொழுது

உனக்கு ஒவ்வொரு இரவும் கற்று தரும் பாடம்
காத்திருந்தாள் பகல் வரும் என்று
காத்திருந்தவனுக்கே இங்கே கனி

காற்றுக்கு எல்லை.இல்லை
நாம் கற்றுக்கொள்வதற்கும்.எல்லை இல்லை

போதும்.என்று நீ நினைத்து விட்டால் நீ எதிர் பார்க்காத அளவு சந்தோசம் அடுத்து கிடைக்கும் எல்லாத்திலும்.இருக்கும்

போதும் என்ற மனமே மருந்து

விண்ணில் பறக்க நீ பறவையாக இருக்க வேண்டும் என்பதில்லை
உழைத்து வியர்வை சிந்தினாலே போதும்
உன் வளர்ச்சி வானத்தை எட்டும்

யாரும் உன்னை குறை சொன்னால்
கோபம் கொள்ளாதே
உன் குறையை திருத்திக்கொள்
அவர்கள் தான் உனக்கு உண்மையான ஆசிரியர்

காலம் என்பது நீ செய்த்து முடிக்கும் வேலையின் இடைப்பட்ட நேரமே
நேரத்தை பாக்காதே
சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செய்து முடிக்க பார்
காலம் உன்னை பின்தொடர தொடங்கும்

பொய் என்று தெரிந்தால்
அதை எள்ளளவு கூட சரி என்று சொல்லாதே
உனக்கு எல் அளவு
சம்மந்த பட்டவருக்கு அது எல்லை முடிவு

கரை நீரை தேக்குவதற்கு இல்லை
நீரின் அடர்த்தியை கூட்டுவதற்க்கே
தடை உன்னை நிறுத்த இல்லை
உன் காரியத்தை கட்டி ஆக்குவதற்க்கே

இருட்டில் இருந்தவனுக்கு தான் பகலின் அருமை புரியும்
கவலை தங்கினால் தான்
இன்பம் பிறக்கும்

எவ்வளோ பெரிய அருவியும்
தரையில் தான் விழும்
பெரும் செல்வந்தனும் அவ்வாறு தான்
மாளிகையில் வசித்தாலும்
மண்ணுக்கடியில் தான் அடங்கணும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker