ஆரோக்கியம்புதியவை

தினமும் 2 நிமிடம் காலில் இந்த இடத்தில் அழுத்துங்கள்: பல பிரச்சனைகள் குணமாகும்

அக்குபஞ்சர் சிகிச்சை என்பது சீனாவில் மிகவும் பிரபலமான ஒன்று. மேலும் அங்கு வாழும் மக்களில் பாதிபேர் வரை இந்த அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளைத்தான் மேற்கொள்கின்றனர்.

LV3 என்றால் என்ன?

LV3 என்பது காலில் உள்ள பெருவிரலுக்கும், இரண்டாம் விரலுக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.இப்பகுதியில் 60 நொடிகள் அழுத்தம் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனை மட்டுமின்றி, உடலில் உள்ள இதர பிரச்சனைகளும் குணமாகும்.

எப்படி செய்வது?
  • நாற்காலியில் அமர்ந்து கொண்டு நம் காலின் மேற்பாதத்தில் பெருவிரலுக்கும் இரண்டாவது விரலுக்கு இடையில் உள்ள புள்ளியில் கை கட்டைவிரலினை பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கவேண்டும்.
  • ஒரு நிமிடம் வரை அதே புள்ளியில் அழுத்தத்தினை தரவேண்டும். இது மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றினை குறைக்கும்.
காலில் அழுத்தம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • இரவு நேரத்தில் உறங்கும் முன் LV3 அழுத்தப் புள்ளியில் அழுத்தம் கொடுப்பதால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி நிம்மதியான உறக்கம் ஏற்படும்.
  • வேலையின் ஊடே ஏற்படும் மன அழுத்தம், டென்சன் போன்றவற்றினை குறைத்து கவனிக்கும் திறனை அதிகரிக்க செய்கிறது.
  • உடலின் மந்தநிலை மற்றும் சோர்வு நிலையை போக்கி, தலைவலி வராமல் தடுப்படுடன் அதை குணமாக்கவும் உதவுகிறது.
  • இந்த புள்ளியானது கீழ்முதுகில் இணைக்கப்பட்டுள்ளதால் உடலில் ஏற்படும் பல்வேறு வலியை குறைக்க உதவுகின்றன.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker