புதியவைவீடு-தோட்டம்

வீட்டை அழகாக்க சூப்பரான வீட்டுக் குறிப்புகள்

நம்முடைய வீடு எப்பொழுதுமே சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும் என்பது தான் குடும்ப தலைவிகளின் அமோக ஆசை.

இதற்காக நாம் பல வழி முறைகளை கையாண்டிருப்போம். என்றாலும் உங்களுடைய வீட்டு பொருட்கள் அலங்கோலமாகவே ஒழுங்கற்ற முறையில் காணப்படலாம். அவற்றை போக்க நீங்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அருமையான வீட்டுக்குறிப்புகள்

 • தேங்காய் தண்ணீரை ரசத்தில் சேர்த்தால் ரசம் நன்றாக இருக்கும்.
 • கறை படிந்த ஆடையில் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை நீங்கி விடும்.
 • கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு குடித்தால் இரத்த கொதிப்பு குணமாகும்.
 • மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
 • தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி கூடும்.
 • பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்புமாக இருக்குமாம்.
 • வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் மிஷினில் வரவே வராது.
 • அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி அதிகமாக இருக்குமாம்.
 • பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற பயன்படுத்தலாம்.
 • மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் நன்றாக வளருமாம்.
 • சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் அதில் அமராது.
 • பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை அடித்தால் மணமாக இருக்கும்.
 • உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விட்டால் ஃப்ரிஜ் வாசனையாக இருக்கும்.
 • ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோ மனமனக்கும்.
 • துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் பளிச்சென்று இருக்குமாம்.
 • நைலான் கயிரை வாங்கியவுடன் சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் இருக்கும்.
 • தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை இருக்காது.
 • ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker