தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு எந்தெந்த உணவுகளை கொடுக்கலாம்?

ஒரு குழந்தை பிறந்ததும் நமக்கு பல விதமான எதிர்பார்புகள் இருக்குமாம். குழந்தை சிரிப்பது முதற்கொண்டு பல் முளைப்பது என பல செயல்களை குழந்தையிடம் எதிர்பார்க்கலாம்.

இந்த தொகுப்பில் பற்கள் முளைக்கும் போது ஏற்படும் மாற்றங்களும் நாம் கொடுக்க வேண்டிய உணவு வகைகளை பற்றி பார்ப்போம்

பெரும்பாலான குழந்தைகளுக்கு சுமார் 6 மாதங்களில் முதல் பல் தோன்றும். ஆனால் குழந்தைகளுக்கு 3 மாதத்திலிருந்து 1 ஆண்டு வரையில் எந்த நேரத்திலும் முதல் பல் முளைக்கும். அது வழக்கமாக முன்புறம் கீழே தோன்றும்.

பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஒரு சில அறிகுறிகள் ஏற்படுமாம். ஈறுகள் சிவந்து வீங்கியிருத்தல் மற்றும் அதன் முகம் மற்றும் கன்னங்கள் சிவந்திருத்தல், நிறைய எச்சில் வடிந்து கொண்டிருத்தல், பல் முளைக்கும் அதே பக்கத்திலுள்ள தனது ஈறுகள் மற்றும் காதை தேய்க்க அது முயற்சித்தல், வலி காரணமாக இரவில் விழித்தெழுதல், என பல அறிகுறிகள் தோன்றுமாம்.

இந்த காரணத்தினால் தான் குழந்தைகள் பற்கள் முளைக்கும் சமயங்களில் கிடைப்பதையெல்லாம் கடிப்பார்களாம். அதுமட்டுமின்றி, கடுமையான வலியால் விடாமல் அழுவார்கள். அதனால் சிலர் பற்கள் முளைக்கும் சமயங்களில் குழந்தைகள் கடிப்பதற்கு, ரப்பர் நிப்புளைக் கொடுப்பார்கள். ஏனெனில் அது வலி தெரியாதவாறு ஒருவித இதத்தைக் கொடுக்குமாம்.

ஆனால் அப்படி எதையேனும் கடிப்பதற்கு கொடுப்பதற்கு பதிலாக, ஆரோக்கியத்தை தரும் சில உணவுப் பொருட்களை கடிக்க கொடுத்தால், வலி குறைவதோடு, குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும். ஆகவே பல் முளைக்க ஆரம்பிக்கும் போது குழந்தைகளுக்கு இந்த உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது சிறந்தது. இதனால் அதனை சாப்பிடும் குழந்தைகளின் வலி மறக்கப்படுவதோடு, அதில் உள்ள இயற்கை இனிப்புகளான சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்றவை நார்ச்சத்துக்களுடன் கிடைத்து, குழந்தைகளுக்கு சக்தியை கொடுக்குமாம்.

அவகேடோ

பற்களை முளைக்க ஆரம்பிப்பதால் கையில் கிடைத்ததை கடிக்கும் குழந்தைகளுக்கு அவகேடோவைக் கொடுத்தால், வலி குறைவதோடு, அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் குழந்தைகளுக்கு கிடைக்குமாம்.

பீச்

குழந்தைகளுக்கு ஒரு துண்டு பீச் பழத்தைக் கொடுத்தால், அதில் உள்ள புளிப்புச் சுவையால் அதைக் கடிக்கும் போது குழந்தைகளின் பல நகைச்சுவையான முகத்தைக் காணலாம். அதுமட்டுமல்லாமல், இந்த பழத்திலும் கால்சியம் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாம்.

வெள்ளரிக்காய்

பற்கள் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஈறுகளில் ஏற்படும் உறுத்தல்கள், வீக்கங்கள் மற்றும் வலிகளை போக்க, வெள்ளரிக்காயைக் கொடுக்க வேண்டும்.

பயறுகள்

நன்கு வேக வைத்த பயறுகளை, குழந்தைகளின் பற்கள் முளைக்கும் போது கொடுப்பது சிறந்தது. இதனால் வலியில்லாமல் ஈறுகளானது எளிதில் வெட்டப்பட்டு சீக்கிரம் பற்கள் முளைக்குமாம்.

சீஸ்

குழந்தைகளுக்கு ஒரு துண்டு சீஸை கொடுத்து மெல்ல வைத்தால், சீஸானது ஈறுகளில் உள்ள வலியைக் குறைத்துவிடுமாம்.

கேரட்

நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும் கேரட்டையும், குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் கேரட்டின் சுவை குழந்தைகளுக்கு பிடிப்பதோடு, எளிதில் மெல்லக் கூடியதாகவும் இருக்குமாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker