குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்காமல் போனால் என்ன காரணம்..?
குறைந்தது 6 மாதங்களாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. காரணம் அந்த தாய்ப்பாலில்தான் குழந்தையின் எதிர்காலத்திற்கான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அந்த ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே அந்தப் பச்சிளம் குழைந்தைக்கு உணவு. இப்படியிருக்கும் சமயத்தில் தாய்க்கு பால் சுரக்காமல் போனால் அதைவிட வேதனை வேறெதுவும் இருக்க முடியாது. இப்படி தாய்ப்பால் சுரக்காமல் போவதற்கு பொதுவான சில காரணங்கள் என்னென்ன பார்க்கலாம்…
பால் மார்பங்களில் பிரச்னை : இந்த சிக்கல் பெரும்பாலும் முதல் முறை அம்மாக்களிடம் ஏற்படுகிறது. பால் உறிஞ்சப்படும் மார்பகங்களில் அடைப்பு அல்லது சரியாக உருவாகவில்லை எனில் பால் சுரக்காமல் போகும். இது பால் விநியோகத்தையும் தடை செய்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கர்ப்ப காலத்தில் இந்த பிரச்னை இருக்காது. உங்கள் பால் மார்புகளை தூண்டுவதற்கு, உங்கள் குழந்தையை உங்கள் மார்பங்களை அடிக்கடி உறிஞ்ச விடுங்கள் அல்லது மார்பங்களை கிள்ளி விடுங்கள். இது பால் உற்பத்தியை அதிகரிக்கும். அதிகமாக உறிஞ்சுவது அதிக பால் உற்பத்திக்கு வழிவகுக்கும். ஏனெனில் மார்பகங்களுக்கு போதுமான பால் உற்பத்தி செய்ய சரியான உறிஞ்சுதல் அவசியம்.
ஹார்மோன் பிரச்னை : பால் சுரப்பதற்கு ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்கள்தான் மார்பகங்களில் பால் சுரப்பதற்கான கட்டளைகளை இடுகின்றன. அவை கட்டுபாடற்று சுரக்கத் துவங்கினால் பால் உற்பத்தி தடைபடுகிறது. இந்த பிரச்னை பெரும்பாலும் பிசிஓஎஸ், நீரிழிவு நோய், தைராய்டு போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கே நிகழ்கிறது. இந்த பிரச்னைகள் இருப்போ மருத்துவரை அணுகி அறிவுரை கேட்பது நல்லது.
மார்பக சிகிச்சை : மார்பகத்தில் ஏதேனும் சிக்கிச்சை பெற்றிருந்தால் அவர்களுக்கு fibroids என்னும் கட்டிகள் உருவாகின்றன. இதனால் பால் சுரப்பது தடைபடுகிறது. பால் முலைகளையும் பாதிக்கிறது. இந்த பிரச்னைகூட அறுவை சிகிச்சையின் தீவிரத்தைப் பொருத்தது. முலைக்காம்புகள் துளைக்கப்பட்டிருந்தால் தாய்ப்பால் உற்பத்தியை பாதிக்கும்.
மாத்திரைகள் உட்கொள்ளுதல் : நீங்கள் ஏதேனும் உடல்நல பாதிப்புகளுக்காக மாத்திரைகள் உட்கொண்டு வருகிறீர்கள் என்றாலும் பால் உற்பத்திக்கு பாதிப்பு உண்டாகலாம். ஆனால் இது அனைத்து பெண்களுக்கும் நிகழாது. இந்த மாத்திரைகள் அவர்களின் ஹார்மோன்களை சமநிலையின்மை செய்வதால் பாதிப்பை ஏற்படுத்தும்.