ஆரோக்கியம்புதியவை

கழிவறையில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்களா… அப்ப இது உங்களுக்கான செய்தி

முன்பெல்லாம் வீட்டிற்கு தான் ஒரு போன் இருக்கும். ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு போன் உள்ளது. சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்களுக்கு நாம் நிறைய அடிமையாகிவிட்டோம் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது கேட்பதற்கு பாதிப்பில்லாதது போன்று இருக்கலாம். ஆனால் நீங்கள் குளியலறை அல்லது கழிவறை செல்லும் போது மொபைல் இல்லாமல் செல்ல முடியாதவர் என்றால், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில அபாயங்கள் உள்ளன. இது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, நம் மனதையும், நமது செயல்பாட்டையும் எவ்வளவு பாதிக்கும் என்பது தெரியுமா?

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவும்

சமீபத்திய ஆய்வு ஒன்று, ஸ்மார்ட்போன்கள் கழிப்பறையின் இருக்கையை விட அழுக்கானவை என்பதைக் காட்டுகிறது. இது மிகவும் அருவெறுப்பான உண்மை. அதுவும் ஒரு ஆய்வில் மொபைல் போன்களில் குடல் பிரச்சனைகளுக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவான ஈ.கோலை மூடிப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா ஃபுட் பாய்சனுக்கு காரணமான ஒரு பாக்டீரியா. இந்த பாக்டீரியா கழிவறையில் இருந்து மட்டுமின்றி, பல அசுத்தமான இடங்களில் இருந்தும் ஒருவரை தொற்றிக் கொள்ளக்கூடியது.

பைல்ஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்

பொதுவாக கழிவறையில் அதிக நேரம் செலவழித்தால் இப்பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஏனெனில் அதிக நேரம் கழிவறையில் இருந்து உறுப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் போது மூல நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் இதுக்குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மூல நோய் வழக்குகள் அதிகரித்துள்ளன. கழிவறையில் அமர்ந்து கொண்டு மொபைலைப் பார்க்கும் போது நீங்கள் சற்று ரிலாக்ஸாக இருக்கலாம். ஆனால் இது சில சங்கடமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிந்திக்கும் திறனைக் குறைக்கும்

செல்போன்கள் உண்மையில் செறிவு மற்றும் சிந்தனையில் இடையூறை ஏற்படுத்தி, ஒரு பிரச்சனையை சரிசெய்வதற்கான நமது சிந்திக்கும் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே எந்த இடத்தில் எதை பயன்படுத்த வேண்டுமோ அதை பயன்படுத்தியும், எதைப் பயன்படுத்தாமல் அமைதியாக இருக்க வேண்டுமோ அப்போது அமைதியாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதன் பொருள் என்னவென்றால், குளியலறை அல்லது கழிவறைக்கு ஸ்மார்ட்போன்களைக் கொண்டு செல்வது நமது மனதிற்கு தேவையான விலைமதிப்பற்ற இடைவெளியைத் தடுக்கிறது.

இடுப்பு பிரச்சனைகளை உண்டாக்கும்

நீண்ட நேரம் கழிவறையில் நேரத்தை செலவிடுவது, நமது செல்களை திசைத்திருப்பி நமது தசைகளுக்கு சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக, குடல், சிறுநீர்ப்பை மற்றும் யோனி போன்ற உறுப்புக்கள் இடுப்பு தசைகளை ஆதரிக்கும் அளவுக்கு வலுவாக இல்லாமல் நழுவக்கூடும். இதற்கு காரணம் நாம் கழிவறையில் அமர்ந்திருக்கும் போது நம்முடைய தோரணை தான்.

அடிமைப்படுத்திவிடும்

ஸ்மார்ட்போன்கள் உலகின் மூலை முடுக்கில் எங்கிருந்தாலும் நம்மை இணைக்க பெரிதும் உதவும் ஒரு பொருளாக இருந்தாலும், அவை ஒருவரை எளிதில் அடிமைப்படுத்திவிடும். இதற்கு அடிமையானவர்கள் எங்கு சென்றாலும் கையில் மொபைலை எடுத்துச் செல்வதோடு, காலையில் கண்ணைத் திறக்கும் போது பார்க்கும் முதல் பொருள் முதல் இரவு கண்களை மூடும் போது கடைசியாகப் பார்க்கும் பொருள் மொபைலாகத் தான் இருக்கும். இது சொல்வதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல அறிகுறி அல்ல.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker