இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா? இந்த ஒரு உணவு பொருள் போதும்! இனி அந்த கவலை எதுக்கு?
நம் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திட முடியும். இது நம்முடைய கூந்தலுக்கும் பொருந்தும்.
தலை முடி தானாக வளர்ந்து விட்டு போகட்டும் என்று நினைத்து அதற்கான பராமரிப்பு முயற்சிகளை மேற்கொள்ளாமல் விட்டு விட்டால் தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் தோன்றும்.
முடி உடைவது, வறண்டு போவது, நுனி முடி பிளவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் தோன்றும்.
இதனால் முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு முடி வளர்ச்சியை பாதிக்கும்.
வழக்கமான கூந்தல் பராமரிப்பு முறையால் நுனி முடி பிளவை சரி செய்ய முடியாத நேரங்களில் சில இயற்கை மூலப்பொருட்கள் சிறந்த முறையில் தலைமுடியை புத்துணர்ச்சி அடையச் செய்து சேதங்களை சரி செய்ய உதவுகின்றன.
இது போன்ற ஒரு மூலப்பொருள், உங்கள் கூந்தலை புதுப்பித்து பிளவுகளை சரி செய்ய உதவுகிறது.
கூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும் ஒரு பொக்கிஷமாக இருப்பது வாழைப்பழம்.
பொட்டாசியம், வைட்டமின் மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்றவற்றின் ஆதாரமாக இருப்பது வாழைப்பழம். இதனால் உங்கள் கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, கூந்தலை எளிய முறையில் நிர்வகிக்க உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
மேலும் கூடுதலாக, வாழைப்பழம், கூந்தலின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தி, முடி உடைவது மற்றும் நுனி முடி பிளவு போன்ற சேதங்களைத் தடுக்கிறது. இது மட்டுமில்லாமல், வாழைப்பழம் உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கச் செய்து , புத்துணர்ச்சி அடையச் செய்து, கூந்தலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் மாற உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் கொண்ட வாழைப்பழத்தை விட்டுவிட்டு இதர கூந்தல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது நல்ல தீர்வு அல்ல.
அதனால், உங்கள் கூந்தலில் உள்ள நுனி முடி பிளவு மற்றும் கூந்தல் பாதிப்புகளைப் போக்க வாழைப்பழத்தினை பயன்படுத்துங்கள்.
வாழைப்பழம் மற்றும் தேன்
தேனில் இருக்கும் நோய் தீர்க்கும் தன்மைக் காரணமாக அது பல நன்மைகளைத் தருகிறது.
மேலும் கூந்தலுக்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இது தவிர, தேனுக்கு இருக்கும் அன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, கூந்தலை சேதத்தில் இருந்து பாதுகாத்து கூந்தலை கண்டிஷன் செய்கிறது.
ஆகவே வாழைப்பழத்துடன் இதன் கலவை கூந்தலை சேதத்தில் இருந்து மீட்டெடுக்க உதவுகிறது.
மூலப்பொருட்கள்
- ஒரு வாழைப்பழம் நன்றாகப் பழுத்தது.
- இரண்டு ஸ்பூன் தேன்
செய்முறை
- வாழைப்பழத்தை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.
- இந்த வாழைப்பழத்தில் தேனைக் கலந்து, இரண்டையும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை உங்கள் கூந்தலில் தடவவும்.
- இந்தக் கலவை உங்கள் கூந்தலில் அரை மணி நேரம் ஊறட்டும்.
- பிறகு தலையை அலசவும்.